
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். பொதுவாகவே தன்னுடைய பிள்ளைகளை கேமராவின் கண் படாமல் பார்த்து கொள்வதில் கவனமாக அஜித் இருந்த நிலையில்... சமீப காலமாக அஜித்தின் பிள்ளைகள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகம் வெளியாகி வருகிறது. அஜித்தின் மனைவி ஷாலினியே சில வீடியோக்களை பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதை வழக்காக வைத்துள்ளார்.
அதே போல் அனோஷ்காவின் பிறந்தநாள் வீடியோ, அவர் அம்மாவுடன் சேர்ந்து வெளியிடங்களுக்கு வரும் போது எடுத்து கொள்ளும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. ஆனால் அப்படி எடுக்கப்படும் புகைப்படங்கள் அவர் அம்மாவுடன் வெளியிடங்களுக்கு வரும் போது பெற்றோரின் அனுமதியோடு எடுக்கப்படுபவை மட்டுமே.
தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வீடியோ ஒன்றில்... அனோஷ்கா அஜித் பொத்திக் ஒன்றில், தன்னுடைய பெண் தோழி ஒருவருடன் சேர்ந்து சில உடைகளை கையில் எடுத்து பார்த்து கொண்டிருக்கிறார். அப்போது அனோஷ்காவின் அனுமதி இன்றி வீடியோ எடுத்து கொண்டு மர்ம நபர் ஒருவர் உள்ளே வந்து எதோ சொல்ல... அனோஷ்காவும், அவரின் தோழியும் அங்கிருந்து பதறியபடி வெளியேறுவதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
ஆனந்த் அம்பானியை விட... வயதில் மூத்தவரா ராதிகா மெர்ச்சண்ட்? எத்தனை வயசு வித்தியாசம் தெரியுமா?
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வரும் நிலையில் இந்த வீடியோவுக்கு கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர் அஜித்தின் ரசிகர்கள். ஒரு பிரபலமான நடிகரின் மகளை அவருக்கு தெரியாமல், அவருடைய சம்மதம் இல்லாமல் வீடியோ எடுப்பது சட்டப்படி குற்றம். எனவே அந்த நபர் மீது தகுந்த எடுக்க வேண்டும் என கூறி வருகிறார்கள். நெட்டிசன்களும் இந்த கருத்தை ஆதரித்து பதிவு போட்டு வருகிறார்கள். இதற்க்கு அஜித்தின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.