
நடிகர் விஜயகாந்தின் மறைவு தமிழகத்தில் பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில் அவர் தொடர்பான பல வீடியோக்களும் செய்திகளும் வெளியான வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது மறைந்த நடிகர் விஜயகாந்த் கட்டி வந்த பிரம்மாண்ட வீடு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. சென்னை போரூரை அடுத்துள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் தான் விஜயகாந்த் இந்த வீட்டை கட்டி வந்துள்ளார். 2013-ம் ஆண்டே இந்த வீட்டின் கட்டுமான பணிகள் தொடங்கி இருந்தாலும் தற்போது வரை 50% பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன.
அரண்மனையை போல் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த வீட்டின் முகப்பு ஃபைவ்ஸ்டார் ஹோட்டலுக்கு இணையாக உள்ளது. மொத்தம் 20,000 சதுர அடி பரப்பளவில் இந்த வீடு கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடு முழுக்க முழுக்க மார்பிள்ஸ் கற்களாக் கட்டப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கப்படாத நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு தான் மின் இணைப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீட்டின் கட்டுமான பணிகள் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் கூறப்படுகிறது. விஜயகாந்த் தனது இறுதிநாட்கள் வரையில் சாலிகிராமத்தில் உள்ள எளிமையான வீட்டில் தான் வசித்து வந்தார்.
தனது அரசியல் வாழ்க்கை தொடங்கிய பிறகு இந்த வீடே போதும் என்று தான் விஜயகாந்த் நினைத்திருந்தார்.
இதனிடையே அவரின் கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டதால் தங்களுக்கு பெரிய வீடு வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்திடம் பிரேமலதா புரியவைத்தார்.
இதனை தொடர்ந்து காட்டுப்பாக்கத்தில் பிரம்மாண்ட வீடு கட்டும் பணியை விஜயகாந்த் தொடங்கினார். ஆனால் சில ஆண்டுகளிலேயே விஜயகாந்த் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டார். மேலும் மருத்துவ செலவுகள், அரசியல் கட்சி செலவுகள் அதிகரிப்பு என பொருளாதர சிக்கலில் விஜயகாந்த் இருந்ததால் இந்த வீடு கட்டும் பணிகள் பாதியிலேயே நின்றது.
விஜயகாந்த உயிருடன் இருக்கும் போது இந்த வீட்டில் எப்படியாவது குடியேறிவிட வேண்டும் என்று பிரேமலதா விரும்பி உள்ளார்.
ஆனால் விஜயகாந்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்ததால் ஒரு மாதத்திற்கு முன்பு விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே அவரின் குடும்பத்தினர் சம்பிரதாயத்திற்கு பால் காய்ச்சி விட்டு சென்றுள்ளனர். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கும் விஜயகாந்த் வரவில்லை.
அவர் கடைசியாக 2019-ம் ஆண்டு இந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அதுவே அவரின் கடைசி வருகையாக மாறிவிட்டது. இந்த நிலையில் பாதியில் நின்று போன இந்த வீட்டின் கட்டுமான பணிகள் தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. விஜயகாந்தின் நினைவாக அவரின் மனைவி மற்றும் மகன்கள் இந்த வீட்டியில் விரைவில் குடியேற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.