
1993-ம் ஆண்டு வெளியான படம் புதிய முகம். சுரேஷ் மேனன் இயக்கி நடித்திருந்த இந்த படத்தில் ரேவதி, வினீத், கஸ்தூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார். இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்த படத்தின் பாடலக்ள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஏ.ஆர். ரஹ்மானின் சிறந்த ஆல்பங்களில் ஒன்றாக இருக்கும்.
இந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் பலரின் பிளே லிஸ்டுகளை ஆக்கிரமித்துள்ளது.
குறிப்பாக கண்ணுக்கு மை அழகு, நேற்று இல்லாத மாற்றம், ஜூலை மாதம் வந்தால் என ஹிட் பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும்.
பாலிவுட்டை தொடர்ந்து டோலிவுட் எண்ட்ரி.. பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாஸ் ஹீரோவை இயக்கப் போகும் அட்லீ..
இந்த நிலையில் கண்ணுக்கு மை அழகு பாடல் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். கண்னுக்கு மை அழகு பாடலை எழுதிய 12 ஆண்டுகளாக வைத்திருந்தேன். எம்.எஸ்.விஸ்வநாதனிடம் அந்த பாடலை கொடுத்தேன். திரும்பி வந்தது. சங்கர் கணேஷிடம் கொடுத்தேன் திரும்பி வந்தது. ஷ்யாம்க்கு கொடுத்தேன் திரும்பி வந்தது. ஹம்சலேகாவிடம் கொடுத்தேன் திரும்பி வந்தது. வட இந்திய இசைக்குழுவிடம் கொடுத்தேன் திரும்பி வந்தது. 12 ஆண்டுகளாக இந்த பாட்டை பையிலே வைத்திருந்தேன்.
ஒரு நாள் சுரேஷ் மேனன் புதிய முகம் படத்திற்கு அவசரமாக பாட்டு வேண்டும் என்று சொன்னார். நான் அந்த பாடலை ரஹ்மானிடம் எடுத்து கொடுத்தேன். 10 நிமிடத்தில் இசை அமைத்தார். நான் எழுதி கொடுத்து ரஹ்மான் 10 நிமிடத்தில் இசையமைத்த ஒரே பாட்டு. அந்த பாட்டு தான் கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு, அவரைக்கு பூ அழகு, அவருக்கு நான் அழகு” என்ற பாடல் தான் அது” என்று தெரிவித்தார். வைரமுத்து பேசும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.