பிரபல  இயக்குனரால்... லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு  பாலியல் துன்புறுத்தல்...திரையுலகினர் அதிர்ச்சி

 
Published : Mar 09, 2017, 04:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
பிரபல  இயக்குனரால்... லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு  பாலியல் துன்புறுத்தல்...திரையுலகினர் அதிர்ச்சி

சுருக்கம்

lakshmi ramakrishnan met sexual harressment for director

மலையாள படத்தில் குணச்சித்திர வேடத்தில் அறிமுகம் கொடுத்து, பின் தமிழ் சினிமாவில் 'பிரிவோம் சந்திப்போம்' படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

அதை தொடர்ந்து, தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழி படங்களில் நடித்தும், தமிழில் இதுவரை மூன்று படங்களை இயக்கியும் உள்ளார். 

மேலும் சின்ன திரையில் 'அவள்'  என்கிற தொடரிலும், தற்போது 'சொல்வதெல்லாம் உண்மை' என்னும் ஒரு நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.

நடிப்பாலும், இயக்கத்தாலும்  அவருக்கு கிடைக்காத ஒரு பெரிய வரவேற்பை பெற்று கொடுத்து, இவர் நடத்தி வரும் நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சி பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தாலும் இதற்காக தற்போது வரை மிக பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்நிலையில்  ஆங்கிலப்பத்திரிக்கை ஒன்றில் அவர் பேசுகையில் ‘ஒரு மலையாள இயக்குனர் தனக்கு  பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்தார் என கூறியுள்ளார்.

அவர் தமிழிலும் படங்களை இயக்கியுள்ளார் என்றும்,  நான் மறுத்த ஒரே காரணத்தால் படப்பிடிப்பில் தன்னை  அசிங்கப்படுத்தினார்.

அதை தொடர்ந்து ஒரு முன்னணி இயக்குனர் அனுப்பியதாக கூறி ஒரு உதவி இயக்குனர் என்னிடம் கதை சொல்ல வந்தார். அவர் என்னிடம் மெல்ல அட்ஜெஸ்மெண்ட் குறித்து பேசினார்.

நான் கூட கால்ஷிட் பற்றி பேசுகிறாரோ என்று நினைத்தேன், பிறகு தான் அவர் எந்த நோக்கத்தில் என்னிடம் பேசினார் என்று புரிந்தது, உடனே அவரை வெளியேற சொல்லிவிட்டேன்’ என கோபமாக பேசியுள்ளார். 

ஆனால் இது வரை யார் அந்த இயக்குனர் என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறவில்லை, இது வரை இளம் நாயகிகள் மட்டுமே தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க பட்டதாக கூறி வந்த நிலையில் முதல் முறையாக 55 வயதை கடந்த ஒரு நடிகை இது போல் கூறியுள்ளது திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பெண்களின் உடை குறித்து சிவாஜியின் கமெண்ட்ஸ்... சின்மயி, அனசுயா பதிலடி
நீங்க திருவிழாவை நடத்துங்க நடத்தாமல் போங்க.! கரகத்தை தூக்குங்க தூக்காம போங்க.! எங்களுக்கு பார்ட் 2 வேணும்.?