4 தேசிய விருதுகளை வென்ற லகான் பட கலை இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை - பதறிப்போன பாலிவுட்

By Ganesh A  |  First Published Aug 2, 2023, 11:52 AM IST

பாலிவுட்டில் லகான், ஜோதா அக்பர் உள்பட ஏராளமான வெற்றிப்படங்களில் பணியாற்றிய கலை இயக்குனர் நிதின் தேசாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


பாலிவுட்டில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய நிதின் தேசாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'தேவதாஸ்', 'ஜோதா அக்பர்' மற்றும் 'லகான்' உள்ளிபட ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு ஆடம்பரமான அரங்குகளை வடிவமைத்து கொடுத்து புகழ்பெற்ற கலை இயக்குராக வலம் வந்தார் நிதின் தேசாய். 

இவர் சிறந்த கலை இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதை நான்கு முறை பெற்றிருக்கிறார். இப்படி பல்வேறு பெருமைமிகு படைப்புகளில் பணியாற்றிய அவர் மும்பை கர்ஜத் பகுதியில் அமைந்துள்ள தனது ஸ்டுடியோவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 57. வருகிற ஆகஸ்ட் 9-ந் தேதி அவர் தனது 58-வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், திடீரென இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Latest Videos

இதையும் படியுங்கள்... இது சரிப்பட்டு வராது... விடாமுயற்சிக்கு குட் பாய் சொல்லிட்டு விருட்டென கிளம்பிய அஜித் - ஷாக் ஆன ரசிகர்கள்

நிதின் தேசாயின் மறைவு பாலிவுட் வட்டாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அலுவலகத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்த நிதி தேசாயின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணயும் மேற்கொண்டுள்ளனர்.

நிதின் தேசாயின் மறைவுக்கு நிதி நெருக்கடி தான் காரணம் என கர்ஜத் பகுதி எம்எல்ஏ மகேஷ் பல்டி கூறியுள்ளார். அவர் பல நாட்களாக நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்து வந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். 4 தேசிய விருதுகளை வென்ற ஒரு கலைஞர் நிதி நெக்கடியால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... ரூ.100 கோடிலாம் வேண்டாம்... ஜெயிலர் படத்திற்காக கம்மி சம்பளம் வாங்கிய ரஜினிகாந்த் - இந்த மனசு யாருக்கு வரும்?

click me!