
கடந்த 1980ம் ஆண்டு இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான "நிழல்கள்" என்ற திரைப்படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக தனது திரை பயணத்தை துவங்கியவர் தான் வைரமுத்து. "இது ஒரு பொன்மாலை பொழுது" என்று அவர் எழுத, இசைஞானி இசையமைத்த அந்த பாடலுக்கு இன்றளவும் ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
வைகை கரை மேகங்கள் தொடங்கி தமிழாற்றுப்படை வரை அவர் 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல தமிழ் திரையுலக வரலாற்றில் ஏழு முறை தேசிய விருது பெற்ற ஒரு மிகச் சிறந்த கவிஞராகவும் அவர் திகழ்ந்து வருகிறார்.
Dear Movie: மணமகள் கெட்டப்பில் கேக் வெட்டி... 'டியர்' படப்பிடிப்பை நிறைவு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்!
கடந்த 1985ம் ஆண்டு பாரதிராஜா அவர்களுடைய இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான "முதல் மரியாதை" திரைப்படத்திற்காக தான் முதல் முதலில் வைரமுத்து தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது திரை பயணத்தை துவங்கி வைத்த தனது திரையுலக ஆசான் பாரதிராஜா அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது அவர் உடல் நலம் தேறி இயல்பு நிலைக்கு திரும்பியதை அறிந்து அவரை நேரில் சந்தித்து அவருக்காக ஒரு பாடல் எழுதி,யது மட்டுமல்லாமல் அதை அவரிடம் பாடி காட்டி அவரை மெய்மறக்கச் செய்துள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.
கார்த்தி நடிப்பில் சர்தார் 2.. பணிகளை துவங்கிய மித்ரன் - ஆனா இந்த முறை இசை யாருடையது தெரியுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.