
இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்” . இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்க உள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன் முறையாக இணைந்து நடிப்பதால், ‘டியர்’ திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்.. விளைவு மிக மோசமாயிருக்கும்! நடிகர் ராஜ்கிரண் ஆவேச பதிவு!
மேலும் இந்த படத்தை Nutmeg Productions சார்பில் வருண் திரிபுரனேனி மற்றும் அபிஷேக் ராமிசெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தை, 'செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
ப்ரீ புரொடக்ஷன் கட்டத்தில் திட்டமிட்டபடி படத்தின் படப்பிடிப்பு வெறும் 35 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது. ‘டியர்’ படத்தின் படப்பிடிப்பு, சென்னை, இடுக்கி, குன்னூர் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ள நிலையில், படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகினி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ருகேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.