கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்.. விளைவு மிக மோசமாயிருக்கும்! நடிகர் ராஜ்கிரண் ஆவேச பதிவு!

By manimegalai a  |  First Published Aug 1, 2023, 8:53 PM IST

பிரபல நடிகர் ராஜ்கிரண், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக... தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஆக்ரோஷமாக போட்டுள்ள பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 


தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்து, பின்னர் நடிகர், இயக்குனர் என தன்னுடைய வெற்றிகளை பதிவு செய்தவர் ராஜ்கிரண். ஆரம்பத்தில்  ஹீரோவாக நடித்த இவர், தற்போது வலுவான, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தன்னுடைய மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர்.

அந்த வகையில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக, அவர்களின் பொறுமையை தவறாக புரிந்து கொண்டால் அதன் விளைவு மோசமாக இருக்கும் என எச்சரிக்கும் விதமாக போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

Tap to resize

Latest Videos

அப்போ அதெல்லாம் சும்மாவா? நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் கவின்! மணமகள் பற்றி வெளியான தகவல்!

தன்னுடைய முகநூல் பக்கத்தில், ராஜ்கிரண் கூறியுள்ளதாவது... 

இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு 
அநீதிகள் இழைக்கப்பட்டாலும்,
எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும்,
அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு,
தங்களால் முடிந்த உதவிகளை
பிற சமுதாயத்தினருக்கும்
செய்து கொண்டு, அமைதியாக
வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம்,
இயலாமையோ, கோழைத்தனமோ,
அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல...

"இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.
இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்",
பொறுமை காக்க வேண்டும் என்று,
இறைவனின் இறுதி தூதுவர்,
இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் 
பின்பற்றுவதால், 
பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்...

இந்தப்பொறுமையை,
தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட
கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்,
அதன் விளைவு மிக மோசமாயிருக்கும். என தெரிவித்துள்ளார்.

click me!