கார்த்தி நடிப்பில் சர்தார் 2.. பணிகளை துவங்கிய மித்ரன் - ஆனா இந்த முறை இசை யாருடையது தெரியுமா?

By Ansgar RFirst Published Aug 1, 2023, 7:19 PM IST
Highlights

பிரபல நடிகர் கார்த்தி தற்பொழுது தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார், ஏற்கனவே அவருடைய ஜப்பான் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ள நிலையில், அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
 

நடிகர் கார்த்தி நடிப்பில் பிரபல இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைப்பில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம் தான் சர்தார். 

தமிழ் திரையுலகில் பெரிய அளவில் பேசப்படாத ஸ்பை ஆக்சன் திரில்லர் கதைக்களம் கொண்ட திரைப்படமாக இது அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் 103 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா, பிரபல நடிகை லைலா, ரஜிஷா விஜயன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

ஏழு நாளுக்கு 7 கார்.. 25 ரூம் கொண்ட சொகுசு பங்களா.. கொடிகட்டி பறந்த நடிகர் - இறுதியில் உயிர்விட்டது எங்கே?

இந்த படத்தின் முதலாம் பாகம் வெளியான பொழுதே, இந்த படத்தினுடைய இரண்டாம் பாகம் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இந்நிலையில் தனது ஜப்பான் பட பணிகளை முடித்துள்ள நடிகர் கார்த்தி, அடுத்தபடியாக சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் விரைவில் ஈடுபட உள்ளார். 

இந்த படத்திற்கான Pre Production பணிகளில் தற்பொழுது இறங்கியுள்ளார் படத்தின் இயக்குனர் பி.எஸ். மித்ரன் என்று தகவல்களை வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் ஒரு கூடுதல் சிறப்பாக, சர்தார்  படத்திற்கு இசையமைப்பாளராக இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா களமிறங்க உள்ளார் என்று தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. 

ஏற்கனவே முதல் பாகத்தில் gvpயின் இசை வெகுவாக பாராட்டப்பட்டது, இந்நிலையில் சர்தார் 2 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுவே முதல் முறை..! எந்த பாடலும் செய்திடாத சாதனையை 24 மணிநேரத்தில் நிகழ்த்திய 'ஜவான்' ஃபஸ்ட் சிங்கிள்!

click me!