ஜீவானந்தம் யார்? ஒருபக்கம் ஜனனி... மறுபக்கம் குணசேகரன்..! பரபரக்கும் விசாரணை! எதிர்நீச்சல் அப்டேட்!

By manimegalai a  |  First Published Aug 1, 2023, 3:58 PM IST

ஜீவானந்தம் யார் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், அவரை பற்றி பரபரப்பாக ஜனனி மற்றும் குணசேகரன் விசாரிக்க துவங்கியுள்ளது இன்றை ப்ரோமோ மூலம் தெரிய வந்துள்ளது.
 


சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், எதிர்நீச்சல் சீரியலை, இல்லத்தரசிகள் முதல் இளம் ரசிகர்கள் வரை ஆர்வமாக பார்த்து வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் டி.ஆர்.பி-யிலும் கெத்து காட்டி வரும் இந்த சீரியலில், சர்ச்சைக்குரிய கதாபாத்திரமாக நுழைந்து ஆதி குணசேகரனையே ஆட்டம் காண வைத்துள்ளது, ஜீவானந்தம் என்கிற கதாபாத்திரம்.

ஜீவனந்தத்தின் என்ட்ரியால், பெரிதாக எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என பீல் செய்த ரசிகர்களையே... கடந்த வார எபிசோட் அதிரவைத்த நிலையில் பரிதாபமாக மாறியுள்ளார் குணசேகரன்.

Tap to resize

Latest Videos

தனுஷுடன் இணையும் அனிகா சுரேந்திரன்..! அதுவும் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா.. வெளியான தகவல்!

இவர் சீரியலில் வில்லனாகவே பார்க்கப்பட்டு வந்தாலும்,  ஜீவானந்தம் துப்பாக்கியை காட்டி மிரட்டியதும் பயந்து போய்.. தூக்கத்தில் எழுந்து சத்தம் போட்டது, தற்போது தங்கி உள்ள வீடும் ஜீவானந்தம் பங்கில் வருவதை அறிந்து நெஞ்சடைப்பு ஏற்பட்டு, ஒரு கை மற்றும் ஒரு கால் செயலிழந்தது போன்ற சம்பவங்கள், இவரின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. எனவே ரசிகர்களும், ஒரு பக்கம் எல்லாம் சரியாகிவிடும் என குணசேகரனுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். 

எஸ்.ஏ.சி-ன் 'கிழக்கு வாசல்' சீரியலுக்கு நாள் குறிச்சாச்சு! சூப்பர் ஹிட் தொடருக்கு முடிவு கட்டிய விஜய் டிவி!

நேற்றைய தினம், எப்படியும் ஜனனி... ஜீவனந்தத்திடம் இருந்து சொத்துக்களை வாங்கி தருகிறேன் என கூறிய நிலையில், ஜீவனந்தத்திடம் மோத வேண்டும் என்றால் அவரின் பேக்ரவுண்டு என்ன என தெரிந்துகொள்ள வேண்டும் என எண்ணி , பெண் ஒருவரை சந்தித்து பேசுகிறார். அதே போல், குணசேகரனும் என்னுடைய கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டிய... அந்த ஜீவானந்தம் யாருனு தெரிந்து கொள்ள சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.தற்போது இதுகுறித்த புரோமோ வெளியாகி சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

click me!