விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில், தற்போது மூர்த்தி - தனத்துக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்த புரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்ணன் - தம்பிகள் பாசத்தை மையமாக வைத்து, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. அப்பாவின் மறைவுக்கு பின்னர், மூன்று தம்பிகளையும்... உடல்நலமில்லாத அம்மாவையும், வீட்டின் மூத்த அண்ணனான மூர்த்தி எப்படி வளர்த்து ஆளாக்குகிறார் , அவரின் மனைவி தனமும், மூர்த்தியின் தம்பிகளை வளர்ப்பதற்காக குழந்தையே பெற்றுக்கொள்ளாமல் வாழ்கிறார் என, மிகவும் செண்டிமெண்ட் டச்சுடன் ஒளிபரப்பாகி வந்ததது இந்த சீரியல்.
என்ன சிம்ரன் இதெல்லாம்.? பிகினி உடையில் போஸ்ட் போட்ட 96 பட நடிகை கௌரி கிஷன்.. ஷாக்கான ரசிகர்கள்!
ஆனால் ஜீவா - கதிர் திருமணத்திற்கு பின்னர், தனமும் கர்ப்பமான நிலையில்... அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதே போல் மூர்த்தியின் தம்பிகளான, கதிர், ஜீவா, கண்ணன் என மூவருக்குமே திருமணம் ஆகி குழந்தையும் பிறந்து விட்டது. எனினும் அவ்வப்போது அண்ணன் - தம்பிகளுக்குள் சின்ன சின்ன பிரச்சனைகள் எட்டி பார்க்க, ஜீவா, மீனாவின் வீட்டிலேயே குடியேறினார். அதே போல் கண்ணனும் தனிக்குடித்தனம் செல்ல, பல கஷ்டங்களில் அடிபட்டு, மீண்டும் குடும்பத்துடன் வந்து சேர்ந்துள்ளார்.
ஜீவாவும் மெல்ல மெல்ல அண்ணன்களுடன் பேச துவங்கி விட்டார். பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை பொறுத்தவரை சந்தோஷமாக நிகழ்வுகளின் போது, சட்டை கிழிய அடித்து கொண்டாலும், பிரச்னை என வந்து விட்டால்... ஒருவருக்கொருவர் தோல் கொடுக்க ஓடி வந்துவிடுவார்கள்.
Breaking: ரஜினிகாந்த், கமல் படங்களில் பணியாற்றிய பிரபலம் காலமானார்!
தனத்துக்கு ப்ரெஸ்ட் கேன்சர் இருப்பது இதுவரை, வீட்டில் உள்ள ஆண்களுக்கு தெரியாது என்றாலும்... முல்லை மற்றும் மீனாவுக்கு தெரிந்து விட்டதால், அவர்கள் தொடர்ந்து தனத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தனம் கேன்சர் செகண்ட் ஸ்டேஜில் இருப்பதால் உடனடியாக சிகிச்சையை துவங்க வேண்டும் என மருத்துவரும் அறிவுறுத்துகிறார். அதற்க்கு முன்னதாக குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுத்த பின்னர் தான் சிகிச்சையை துவங்கி முடியும் என கூறியுள்ளார்.
கண்ணீரில் மூழ்கிய... குக் வித் கோமாளி பிரபலங்கள்! ஃபைனலில் அப்படி என்ன தான் நடந்தது? வைரல் வீடியோ!
அந்த வகையில் தற்போது எப்படியோ முல்லை ட்ராமா போட்டு... தனத்தை மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்க, தற்போது மூர்த்தி - தனத்துக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. எனிமும் இதற்க்கு பின்னர் தனத்துக்கு கேன்சர் இருக்கிறது என, தெரியவந்தால்... அதை எப்படி தாங்க போகிறதோ, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .