கண்ணீரில் மூழ்கிய... குக் வித் கோமாளி பிரபலங்கள்! ஃபைனலில் அப்படி என்ன தான் நடந்தது? வைரல் வீடியோ!

By manimegalai a  |  First Published Jul 26, 2023, 4:39 PM IST

'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, ஃபைனலில் போது... செட்டே கண்ணீரில் மூழ்கிய, தருணம் குறித்த புரோமோ வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 


விஜய் டிவியில் கடந்த சில மாதமாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் பினாலே, ஜூலை 30ஆம் தேதி, தொடர்ந்து 5 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ள நிலையில்...  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  அனைவரும் கண்கலங்கி அழுவது போன்ற ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சமையல் நிகழ்ச்சியை கூட காமெடியாக எடுக்க முடியும் என நிரூபித்த நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'.  முதல் மூன்று சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. இதில் விசித்ரா, சிவாங்கி, ஆண்ட்ரியன், கிஷோர் ராஜ்குமார், விஜே .விஷால், சிருஷ்டி டாங்கே, ஷெரின், ராஜ் ஐயப்பா, காளையன், மைம் கோபி, டி ஆர் கே கிரண், கஜிஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பைனலுக்கு மொத்தம் 6 பிரபலங்கள் முன்னேறிய நிலையில் அவர்களுக்கான பினாலே சுற்றுக்கான படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது.

Tap to resize

Latest Videos

சீரியல் வரலாற்றிலேயே முதல் முறையாக... எதிர்நீச்சல் தொடரில் ஹிஜாப்புடன் நடிக்கும் முஸ்லிம் நடிகை!

நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு முன்பே, 'குக் வித் கோமாளி' வெற்றியாளர் பற்றிய தகவலும் வெளியானது. அதன்படி குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டில் வின்னராக, மைம் கோபி தேர்வு செய்யப்பட்டதாகவும், இரண்டாவது பரிசை சிருஷ்டி டாங்கேவும், மூன்றாவது பரிசை விசித்ராவும் கைப்பற்றியதாக கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சி வரும் ஜூலை 30ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ள நிலையில் இதுகுறித்த புரோமோ ஒன்று வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நயன்தாரா... சமந்தா கொஞ்சம் ஓரமா போங்க! அட்டை படத்திற்கு ஹாலிவுட் நடிகை போல் மாறி போஸ் கொடுத்த வாணி போஜன்!

இந்த முறை குக் வித் கோமாளி சீசன் 4 பினாலே நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக, பரத், வாணி போஜன், மாகாபா ஆனந்த், பிரியங்கா, மாரி செல்வராஜ் போன்ற பிரபலங்கள் வருகை தந்துள்ளனர். செஃப் வெங்கடேஷ் பட், பிரியங்காவை பழைய கோமாளி என கிண்டல் செய்ய... அப்போ ரொம்ப வயசானவங்களா? என புகழ் காமெண்ட்ரி கொடுத்தது கலகலப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, கோமாளிகள் மற்றும் குக்குகள் இந்த நிகழ்ச்சி மூலம் தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டனர். செஃப் தாமு... இந்த நிகழ்ச்சியில் எல்லோரும் என்னை அப்பா அப்பா என கூப்பிடுவாங்க அது தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் அதை மிஸ் செய்வேன் என அழுகிறார். இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

click me!