நாம் ஆரம்பத்தில் இருந்தே நயன்தாராவை கொழு, கொழு லுக்கில் தான் பார்த்திருக்கிறோம். இந்நிலையில் செம்ம ஸ்லிம் லுக்கில் இருக்கும் நயன்தாராவின் இளமைக்கால புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார். டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர். படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தோல்வி தான் வெற்றிக்கு முதற்படி என்பார்கள். ஆம்... நயன்தாரா அடுத்தடுத்து சந்தித்த காதல் தோல்விகளும், நம்பிக்கை துரோகமும் தான் இப்படி விஸ்வரூப வளர்ச்சிக்கு உந்து சக்தியாக மாறியுள்ளது. சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சிம்பு - நயன்தாரா காதலித்து வந்த சங்கதி அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் தனிமையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. அதன் பின்னர் சிம்பு - நயன்தாரா காதல் முறிந்தது.
இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா, பிரபுதேவா இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக வில்லு படத்தில் நடித்தார். அப்போது பிரபுதேவாவிற்கும் நயனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. திருமணம் வரை சென்ற அந்த காதல் சில சிக்கல்களால் பிரிவில் முடிந்தது.
இதையும் படிங்க: சர்ச், மசூதிகளெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா?.. கோயில் மட்டும் தான் தெரியுதா? ஜோதிகாவை விளாசும் நெட்டிசன்கள்...!
தற்போது நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் இருப்பது அனைவரும் அறிந்த செய்தி நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகிறார். அங்கு போய் இருவரும் ஜாலியாக ஊர் சுற்றுவது போதாது என்று, விதவிதமாய் போட்டோ எடுத்து... அதை இன்ஸ்டாவில் போட்டு முரட்டு சிங்கிள்ஸை வெறுப்பேற்றுகின்றனர்.
இதையும் படிங்க: “இவரை தொட்ட நீ கெட்ட”... ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த திரெளபதி இயக்குநர்...!
லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்ததே நயன்தாராவின் பழைய காதல் சங்கதிகள் சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறி வருகின்றன. அதேபோல் நயன்தாராவின் பழைய புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நாம் ஆரம்பத்தில் இருந்தே நயன்தாராவை கொழு, கொழு லுக்கில் தான் பார்த்திருக்கிறோம். இந்நிலையில் செம்ம ஸ்லிம் லுக்கில் இருக்கும் நயன்தாராவின் இளமைக்கால புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ட்ரையல் ரூமில்... ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் மீரா மிதுன் பார்த்த காரியம்... செம்ம கடுப்பில் நெட்டிசன்கள்...!
2010ம் ஆண்டு பழமையான கார் மற்றும் பைக்குகளுடன் இணைந்து திரைத்துறை நட்சத்திரங்களும் போஸ் கொடுத்து அசத்திய காலண்டர் போட்டோ ஷூட் ஒன்று நடந்துள்ளது. வெங்கட்ராம் என்ற புகைப்பட கலைஞரின் காலண்டர் போட்டோ ஷூட்டிக்கு நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் போஸ் கொடுத்திருக்கிறார். ஓவர் ஸ்லிம் லுக்கில், ஸ்டைலிஷ் ஷேர் ஸ்டைல், மார்டன் உடையில் பார்க்க கொஞ்சம் கிளாமர் தூக்கலாக இருக்கும் நயனின் இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.