இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைவால் 'லாபம்' படம் அடுத்த மாதம் வெளியாகுமா? தயாரிப்பு நிறுவனம் பரபரப்பு அறிக்கை!

Published : Mar 20, 2021, 03:44 PM ISTUpdated : Mar 20, 2021, 03:45 PM IST
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைவால் 'லாபம்' படம் அடுத்த மாதம் வெளியாகுமா? தயாரிப்பு நிறுவனம் பரபரப்பு அறிக்கை!

சுருக்கம்

லாபம் திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸாகுமா? என்கிற சந்தேகம் எழுந்த நிலையில் இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி 7 சி என்டர்டெயின்மெண்ட் நிறுவதுடன் இணைந்து தயாரித்து வந்த 'லாபம்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் கடந்த ஞாயிற்று கிழமை அன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். எனவே லாபம் திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸாகுமா? என்கிற சந்தேகம் எழுந்த நிலையில் இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்: உடலோடு ஒட்டியிருக்கும் பயிற்சி உடையில்... மொத்த அழகையும் காட்டி மூச்சு முட்டவைத்த ராகுல் ப்ரீத் சிங்!
 

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் படங்களில் தொனிக்கும் கருத்துக்களும், ஒலிக்கும் போராட்ட குரலும், என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக் கூடியவை. அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்று தான் எங்கள் நிறுவனமும், விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து, விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள லாபம் திரைப்படம்.

இந்த படம் திரைக்கு வருவதற்கான இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன, இந்த தருணத்தில் எங்கள் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைவு மிகுந்த வருத்தமும், வேதனையும், அளிக்கிறது. அதே சமயம் எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் லாபம் படத்தின் அனைத்து பணிகளையும் முழுமையாக முடித்து கொடுத்துவிட்டார். மீதம் இருக்கும் சில பணிகளை எங்கள் படக்குழுவினரை முடித்து வெளியிட உள்ளோம். அனைத்து பணிகளையும் முடித்து ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்:நீச்சல் உடையில் கவர்ச்சி விருந்து கொடுத்த விஜய் டிவி டிடி..! வாயடைத்து போன ரசிகர்கள்!
 

எங்கள் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாகவும், அவரின் ரசிகர்களுக்கான திரைப்படமாகவும் லாபம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று அறிக்கையை வெளியிட்டுள்ளது 'லாபம்' படத்தின் தயாரிப்பு நிறுவனம். இதில் இருந்து குறித்த தேதியில் அடுத்த மாதம், மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் கனவு படைப்புகளில் ஒன்றான, 'லாபம்' திரைப்படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!