
நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்' திரைப்படம் அடுத்த மாதம், 9 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் 'கர்ணன்'. ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் விதமாக, இதுவரை 'கண்டா வரச்சொல்லுடா', 'பண்டாரத்தி புராணம்', மற்றும் 'திரௌபதி முத்தம்' ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின், டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வித்தியாசமான போஸ்டருடன் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: உடலோடு ஒட்டியிருக்கும் பயிற்சி உடையில்... மொத்த அழகையும் காட்டி மூச்சு முட்டவைத்த ராகுல் ப்ரீத் சிங்!
பல சிறுவர்கள், முகத்தில் பொம்மை முகம் கொண்டு நின்று கொண்டிருக்க... தனுஷ் நடுவில் கையில் கத்தியுடன் அமர்ந்திருக்கிறார். மார்ச் 23 ஆம் தேதி கர்ணன் பட டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மாறி செல்வராஜ் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான, பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தனுஷின் இந்த படத்திற்கும் அதே விதமான எதிர்பார்ப்புகள் உள்ளது.
மேலும் செய்திகள்: நீச்சல் உடையில் கவர்ச்சி விருந்து கொடுத்த விஜய் டிவி டிடி..! வாயடைத்து போன ரசிகர்கள்!
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த அப்படத்தில், இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.