கமல்ஹாசனுக்கு எதிராக தெருத்தெருவாக இறங்கி பிரச்சாரம் செய்யும் கலா மாஸ்டர்! வைரலாகும் புகைப்படம்!

Published : Mar 20, 2021, 11:30 AM IST
கமல்ஹாசனுக்கு எதிராக தெருத்தெருவாக இறங்கி பிரச்சாரம் செய்யும் கலா மாஸ்டர்! வைரலாகும் புகைப்படம்!

சுருக்கம்

கடந்த ஜனவரி மாதம், பாஜக கட்சியில் இணைந்த, நடன இயக்குனர் கலா...  பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து, தெருத்தெருவாக பிரச்சரம் மேற்கொண்டு வருகிறார். இது குறித்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

கடந்த ஜனவரி மாதம், பாஜக கட்சியில் இணைந்த, நடன இயக்குனர் கலா...  பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து, தெருத்தெருவாக பிரச்சரம் மேற்கொண்டு வருகிறார். இது குறித்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அழுத்தமாக கால் ஊன்ற நினைக்கும் பாஜக கட்சியில் அடுத்தடுத்து பல பிரபலங்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம் குமார், குடும்பத்தோடு மேளதாளம் முழங்க வந்து பாஜக கட்சியில் இணைந்தார். கடந்த வாரம் கூட நடிகர் செந்தில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து தன்னை பாஜக கட்சியில் இணைத்து கொண்டது மட்டும் இன்றி, பாஜக வேற்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் நட்சத்திர தொகுதிகளில் ஒன்றான கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும், வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து நடன இயக்குனர் கலா தெருத்தெருவாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து புகைப்படத்தையும் அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, முதன்முதலாக தேர்தல் பிரச்சாரம் செய்வதாகவும் எங்களுடைய வெற்றி வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்வதாக கூறியுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என  தெருத்தெருவாக வானதி சீனிவாசன் நடந்தே சென்று பிரசாரம் செய்து வரும் நிலையில், அவருடன் கலா மாஸ்டரும் நடந்தே சென்று பிரசாரம் செய்து வருகிறார். நாங்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் மிகப் பெரிய வரவேற்பு எங்களுக்கு கிடைத்து வருகிறது என்றும் அதனால் நாங்கள் இந்த தொகுதியில் வெற்றி பெற்று விடுவோம் என்றும் கலா மாஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடும் இதே தொகுதியில் தான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனும் போட்டியிடுகிறார். பல படங்களில் இணைந்து கலா மாஸ்டர் மற்றும் கமல்ஹாசன் இணைந்து பணியாற்றி இருந்தாலும், இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வரும் நிலையிலும், தன்னுடைய கட்சிக்காக கமலஹாசனையே எதிர்த்து கலா மாஸ்டர் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!