
மீண்டும் கொரோனா தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் பலரும், கொரோனா தடுப்பூசி கொள்ளும் நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஒருவரும் கொரோனா தடுப்பூசி கொடுகொண்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து மார்ச் 1 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இரண்டாவது கட்டத்தில் 60-வயதைக் கடந்தவர்களுக்கும், இணைநோய்கள் கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக பாரத பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதனால் பொதுமக்களும் தொடர்ந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியை எவ்வித அச்சமும் இன்றி எடுத்து கொள்ள துவங்கியுள்ளனர்.
மேலும், நடிகை குஷ்பு, கமலஹாசன் , எஸ்.வி.சேகர், ஸ்ரீ பிரியா, பழம்பெரும் நடிகை லதா, தொகுக்க தலைவர் ஸ்டாலின் என தொடர்ந்து நடிகர் நடிகைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு வரும் நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
https://twitter.com/Jharrisjayaraj/status/1372864089882382347
அந்த வகையில் தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இன்று கொரோனா தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டார். இது குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து, இன்று நான் கொரோனா தடுப்பபூசி செலுத்தி கொண்டேன், அதேபோல் அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள் தாமதம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.