மனைவி முன்பே நடிகைக்கு முத்தம்..! கணவரை வெளுத்து வாங்கிய ஜெனிலியா... வைரலாகும் வீடியோ!

By manimegalai aFirst Published Mar 20, 2021, 1:25 PM IST
Highlights

நடிகை ஜெனிலியா தன்னுடைய கணவருடன் சேர்ந்து, வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
 

நடிகை ஜெனிலியா தன்னுடைய கணவருடன் சேர்ந்து, வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. திருமணம் ஆகி குழந்தைகள் பெற்ற பின் திரையுலகில் இருந்து சில வருடங்கள் ஒதுங்கியே இருந்த நிலையில், மீண்டும் ஹிந்தியில் ரீ- என்ட்ரி கொடுத்து கணவருடன் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டார்.

கோலிவுட் திரையுலகில், தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்ற ஒரு சில நடிகைகளில் ஜெனிலியாவும் ஒருவர்.... ஜெனிலியா நடித்த சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், போன்ற படங்களில் துரு துரு நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். தமிழ் மற்றும் இன்றி, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். 

மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 'குக் வித் கோமாளி' பிரபலங்கள்? தீயாக பரவும் தகவல்!
 

இந்நிலையில் இவர் Tere Naal Love Ho Gaya என்கிற படத்தில் நடித்த போது, நடிகர் ரித்தீஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் காதல் மலர்ந்தது. இவர்களுடைய காதல் திருமணத்திலும் முடிந்தது. கடந்த 2012 ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின், ஒப்புக்கொண்ட படங்களை மட்டுமே நடித்து முடித்து கொடுத்தார். பின் குழந்தைகள் பெற்று கொண்டு, குழந்தைகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது நாம் அறிந்தது தான்.

மேலும் செய்திகள்: நீச்சல் உடையில் கவர்ச்சி விருந்து கொடுத்த விஜய் டிவி டிடி..! வாயடைத்து போன ரசிகர்கள்!
 

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விழா ஒன்றில் தனது கணவருடன் ஜெனிலியா கலந்துகொண்டார். அதே விழாவுக்கு வருகை தந்திருந்த நடிகை பிரீத்தி ஜிந்தா உடன் ரித்தேஷ் தேஷ்முக் சிரித்து சிரித்து பேசியதுடன், அன்பு மிகுதியால் அவரது கைகளிலும் முத்தத்தை பொழிந்தார். இந்த செயல் ஜெனிலியாவும் சங்கடத்தை ஏற்படுத்தினாலும், சிரித்து சமாளித்தார் என்பது இந்த வீடியோவை பார்த்தாலே தெரிகிறது.

 

For the love of the viral video.. 💚💚💚 & of course & the cutest ting ting pic.twitter.com/wCsPhDMPcq

— Genelia Deshmukh (@geneliad)

 

இந்த வீடியோ தற்போது திடீரென வைரலாக துவங்கியது. இதை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவு செய்து கணவரை வெளுத்து வாங்குவது போல் ஜாலியான ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ, தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. 

click me!