இளைஞர்கள் மத்தியில் விவசாயத்தை ஊக்குவிக்கும் "குத்தூசி"

 
Published : Sep 18, 2017, 07:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
இளைஞர்கள் மத்தியில் விவசாயத்தை ஊக்குவிக்கும் "குத்தூசி"

சுருக்கம்

kuthusi film create awarness for agriculture

வத்திகுச்சி திலீபன், அறிமுக நடிகை அமலா, யோகி பாபு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் ஜெயபாலன் நடித்திருக்கும் படம் "குத்தூசி".  இப்படத்தில் அந்தோனி எனும் வெளிநாட்டு நடிகரும் நடித்திருக்கிறார். ஸ்ரீ லக்ஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் M.தியாகராஜன் தயாரித்துள்ளார். படத்தின் இயக்குனர் சிவசக்தி. 

இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ விவசாயம் சார்ந்த படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த குத்தூசி திரைப்படம் முதல் முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதைக் கூறும் படமாகவும் உருவாகியுள்ளது.

நம் கஷ்டம் நம்மோடு போகட்டும் என்று ஒவ்வொரு விவாசாயியும் நினைத்ததால்தான் அவர்கள் பிள்ளைகளுக்கு விவசாயத்தில் ஆர்வமில்லாமல் செய்துவிட்டார்கள். நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான் என உலக நாடுகள் அறியும். நம் நாட்டின் பாரம்பரிய விவசாயத்தை எப்படியாவது அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் நாயகன் எப்படி போராடுகிறார் என்பதே கதை. தற்போது இயற்கை விவசாயம் என்பது அரிதாவிட்டது. இதனை மீட்க இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதையும் கூறியிருக்கிறார் இயக்குனர் சிவசக்தி.

இப்படத்தின் படப்பிடிப்பு கள்ளக்குறிச்சியில் உள்ள கல்வராயன் மலைப் பகுதியிலும்  சென்னையிலும் என மொத்தம் 54 நாட்கள் நடத்தியிருக்கிறார்கள்.

காதல், ஆக்‌ஷன், எமோஷன் என கமர்ஷியலாகவும் மக்களுக்குப் பிடிக்கும் வகையிலும் குத்தூசி உருவாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் இசையை வெளியிட திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?