இந்த வாரம் சென்னை பாக்ஸ் ஆஃபீஸை கலக்கும் படங்கள்!

 
Published : Sep 18, 2017, 04:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
இந்த வாரம் சென்னை பாக்ஸ் ஆஃபீஸை கலக்கும் படங்கள்!

சுருக்கம்

High box office collection movies

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் போதும் இரண்டு முதல் நான்கு படங்கள் வரை வெளியாகின்றன. அவற்றில் பாக்ஸ் ஆபிஸில் கலெக்சன் செய்வது ஒன்று அல்லது இரண்டு படங்களாகத்தான் இருக்கும். 

இந்நிலையில் கடந்த வாரம் ஜோதிகா நடித்து சூர்யா தயாரித்திருந்த  மகளிர் மட்டும், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்திருந்த துப்பறிவாளன், யார் இவன், மற்றும் களத்தூர் கிராமம் ஆகிய நான்கு படங்கள் திரைக்கு வந்தன.

ஆனால் இவற்றில் விஷால் நடித்துள்ள  துப்பறிவாளன் திரைப்படம் கடந்த இரண்டு நாட்களில் சென்னையில் மட்டும் 1.6 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஜோதிகா நடித்து வெளி வந்துள்ள மகளிர் மட்டும் திரைப்படம், கடந்த இரண்டு நாட்களில் 97 லட்சம் வசூல் செய்துள்ளது.

மேலும் கடந்த இரண்டு வாரங்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்  ஹாலிவுட் படமான இட் கடந்த வாரம் முழுவதும்  ரூ 1.34 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பது மட்டுமின்றி ஹிட் வரிசையிலும் இடம்பிடித்துவிட்டது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?