
இன்னும் சில நாட்கள்தான்... பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை எட்ட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் தற்போது டாஸ்குகளும்கூட மிகவும் கடுமையாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கணேஷ் குறித்து பிந்துவிடம், “இந்த மாட்டுப் பயல அடக்க முடியவில்லை” எனக் கூறுகிறார் ஆரவ். மேலும் சினேகனும் உடலில் அடி பட்டது போல் அமர்ந்திருக்கிறார் அவருக்கு பிந்து ஒத்தடம் கொடுக்கிறார்.
மேலும் ஆரவ் டைட்டில் வின் செய்த பின், இந்த 50 லட்ச ரூபாயையும் உடம்புக்கு தான் செலவு செய்யவேண்டும் என கூறுகிறார். இந்த ப்ரோமோவை பார்த்த முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ஆர்த்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஆரவை கலாய்ப்பது போல் 'சும்மா வந்துடுமா ரூ.50 லட்சம்? இன்னும் நிறைய ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் இருக்கு!” எனக் கூறி பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.