
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்களை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் புதுப்பித்து ரீ ரிலீஸ் செய்வது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு சாதனை படைத்தது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிக வசூல் செய்த முதல் படம் என்கிற சாதனையை தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் ‘கில்லி’ பிடித்திருந்தது.
தொடர்ந்து விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் விஜயின் மற்ற வெற்றிப் படங்களை வெளியிட படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். அந்த வகையில் 2000-ம் ஆண்டு விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘குஷி’ திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து 2005-ம் ஆண்டு விஜய் அசின் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘சிவகாசி’ படமும் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்படும் என ஏ.எம் ரத்னம் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.