
சேகர் கம்முலா இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘குபேரா’ இது தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
‘குபேரா’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு
படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஜூன் 1-ம் தேதி சென்னை ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி வளாகத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.