ரியல் ஹீரோஸ் இவங்க தான்.. ஏழை பெண்ணுக்கு பேருதவி செய்த KPY பாலா - லாரன்ஸ் .. குவியும் பாராட்டு..

By Ramya s  |  First Published Mar 30, 2024, 9:37 AM IST

KPY பாலா – ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து கணவனை இழந்த ஏழை பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளனர்.


கலக்கப்போவது யாரு நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பாலா. இந்த நிகழ்ச்சியின் மூலம் KPY பாலா என்று பிரபலமானார். இதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்த நிலையில் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். 

ஸ்டாண்ட் அப் காமெடியன், நடிகர் என்பதை தாண்டி தனது சமூகநல செயல்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் தனது வருமானத்தில் இருந்து பெரும்பகுதியை ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் செலவழித்து வருகிறார்.
குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது போதிய மருத்துவ வசதி இல்லாத இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது என தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார்.

Latest Videos

வில்லனாக மிரட்டிய டேனியல் பாலாஜி ஹீரோவாக நடித்த படம் எது தெரியுமா ? கடைசி வரை ஏன் கல்யாணமே பண்ணல?

மேலும் கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட போது 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார் பாலா. இப்படி பல உதவிகளை செய்து வரும் பாலா சமீபத்தில் கூட பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இளைஞர் ஒருவருக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார்.பாலாவின் இந்த தன்னலமற்ற சேவையை பாராட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ், இனி அவர் செய்யும் அனைத்து நலத்திட்ட உதவியிலும் தனது பங்கு இருக்கும் என்று கூறியிருந்தார்.

அந்த வகையில் KPY பாலா – ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து கணவனை இழந்த ஏழை பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளனர். திருமணமான ஆரம்ப கட்டத்திலேயே கணவனை இழந்து 3 பெண் குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வரும் முருகம்மாள் என்ற பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளனர். 

அந்த பெண் மின்சார ரயிலில் சமோசா விற்று வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். சொந்தமாக ஆட்டோ வாங்கி, ஓட்ட வேண்டும் என்பதே அந்த பெண்ணின் கனவாக இருந்தது. எனது ரோல் மாடலான ராகவா லாரன்ஸ் மாஸ்டர் உதவியுடன் புதிய ஆட்டோ வாங்கி கொடுத்ததாக பாலா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

வில்லனாக மிரட்டிய டேனியல் பாலாஜி ஹீரோவாக நடித்த படம் எது தெரியுமா ? கடைசி வரை ஏன் கல்யாணமே பண்ணல?

பாலா, ராகவா லாரன்ஸ் செய்த இந்த உதவிக்கு சமூக வலைதலங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. பல்வேறு தரப்பினரும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

click me!