
வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமான சம்பவம் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தி என்ற சின்னத்திரை மூலம் நடிகராக அறிமுகமானவர் டேனியல் பாலாஜி(48). இவர் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை, பைரவா உள்ளிட்ட பல்வேறு படிங்களில் படித்துள்ளார். இவருக்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளே உள்ளது.
இதையும் படிங்க: Rajinikanth : “அந்த படம் செமயா இருக்கு..” கமல் படத்தை பார்த்து பதறிய ரஜினி.. தயாரிப்பாளரிடம் போட்ட டீல்..
இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த போது டேனியல் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: Vijay Net worth : 250 கோடி சம்பளம்... 2 ஆண்டுகளில் மளமளவென உயர்ந்த விஜய்யின் சொத்து மதிப்பு - அதுவும் இவ்வளவா?
டேனியல் பாலாஜியின் இறப்பு செய்தி திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தான் ஒவ்வொருவராக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.