
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தல அஜித் மற்றும் தளபதி விஜய் என்று கோலிவுட் உலகில் முன்னணியில் இருக்கும் நடிகர்களுக்கு ஒரு திரைப்படத்தை இயக்குவது என்பது மிகவும் சிரமமான விஷயங்களில் ஒன்று. முதலில் அந்த இயக்குனர், குறிப்பிட்ட அந்த நடிகரின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வண்ணம் தனது கதை அம்சத்தை அமைக்க வேண்டும்.
அதே நேரத்தில் ஒரு இயக்குனராக தனது மனதில் வைத்திருக்கும் அந்த கதையையும் சரியாக நகர்த்திச் செல்ல வேண்டும். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கைதி, விக்ரம் மற்றும் லியோ என்றும் முன்னணி நடிகர்களை வைத்து மிகச் சிறந்த திரைப்படங்களை கோலிவுட் உலகிற்கு கொடுத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
தற்பொழுது அவர் தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான ரஜினிகாந்த் அவர்களை இயக்கவிருக்கிறார். வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதி தலைவர் 171 திரைப்படத்தின் டீசர் மற்றும் டைட்டில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து பல யூகங்களை நெட்டிசன்கள் வெளியிட துவங்கியுள்ளனர்.
தலைவர் 171 டைம் டிராவல் படமா?
வெளியான தலைவர் 171 போஸ்டரில், ஒரு டைம் மெஷின் முன் அவர் நிற்பது போல தோன்றுகிறது. ஆகையால் இந்த படம் டைம் டிராவல் என்ற விஷயத்தை பயன்படுத்தி எடுக்கப்படும் ஒரு ஆக்ஷன் படமாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
மீண்டும் வில்லனாக சூப்பர் ஸ்டார்?
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் அளித்த சில வேட்டிகளில், தனக்கு சூப்பர் ஸ்டாரின் வில்லத்தனம் தான் எப்பொழுதும் பிடிக்கும். அதனால் அதை அதிகம் பயன்படுத்த நான் முயற்சிப்பேன் என்று கூறியிருந்தார். ஆகவே டைம் மெஷினை பயன்படுத்தி, முற்காலத்திற்கு சென்று, அங்கு வில்லனாக வாழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை காட்ட லோகேஷ் கனகராஜ் முற்படுகிறாரா? என்று யூகித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
எது எப்படி இருந்தாலும், வெளியான அந்த போஸ்டரில் ரஜினிகாந்த் ஒரு வின்டேஜ் ஸ்டைலில் இருப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. ஆகவே நிச்சயம் இது ஒரு பீரியட் படமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. "இது எப்படி இருக்கு" என்று படத்தின் டைட்டலுக்கு ஸ்லோகன் வைத்தாலும் ஆச்சரிப்பட இன்றும் இல்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.