Mollywood Movies : மூன்றே மாதம்.. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த மோலிவுட் மூவிஸ் - டாப் 4 லிஸ்ட் இதோ!

Ansgar R |  
Published : Mar 29, 2024, 04:38 PM IST
Mollywood Movies : மூன்றே மாதம்.. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த மோலிவுட் மூவிஸ் - டாப் 4 லிஸ்ட் இதோ!

சுருக்கம்

Mollywood Movies : மலையாள திரையுலகம் எப்போதுமே இந்திய சினிமாவை ஆர்ச்சர்யத்தில் ஆழ்த்த மறந்ததில்லை. அந்த வகையில் இந்த 2024ம் ஆண்டில் வெளியான 4 மோலிவுட் படங்கள், மெகா ஹிட் படங்களாக மாறியுள்ளது.

Premalu, இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அண்மையில் தமிழகத்திலும் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுள்ளது. உலக அளவில் 100 கோடி ரூபாயையும் தாண்டி இந்த படம் வசூல் செய்து வருகின்றது.

பிறமயுகம்.. பிரபல நடிகர் மம்மூட்டி நடிப்பில் முற்றிலும் கருப்பு வெள்ளை படமாக வெளியானது தான் இந்த படம். ராகுல் சதாசிவன் இயக்கத்தில் வெளியான இந்த படம் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. உலக அளவில் இந்த படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ninaithen Vandhai : வேலுவுக்கு தண்ணி காட்டிய சுடர்.‌. எழில் செய்யும் உதவி - நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்

Manjummel Boys, இந்த ஆண்டில் மிக சிறந்த படமாக மாறியுள்ளது இந்த படம் என்றால் அது மிகையல்ல. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் சுமார் 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது இந்த படம். உலக அளவில் 200 கோடி ரூபாயையும் தாண்டி வசூல் சாதனை படைத்தது வருகின்றது இந்த படம். 

ஆடுஜீவிதம், முற்றிலும் மாறுபட்ட, பல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தான் இது. சுமார் 98 கிலோவில் இருந்து 68 கிலோவிற்கு தன் உடல் எடையை குறைத்து, ஒரு மிகசிறந்த ART திரைப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் Blessy. ஏற்கனவே புகழின் உச்சியில் உள்ள நடிகர் பிரித்விராஜ், இந்த படத்தின் மூலம் மற்றொரு பரிமாணத்திற்கு சென்றுள்ளார் என்றே கூறலாம்.

Aadujeevitham : கேரளாவில் விஜய் பட வசூலை கிட்ட கூட நெருங்க முடியாத ஆடுஜீவிதம்! முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?
ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ