வில்லனாக மிரட்டிய டேனியல் பாலாஜி ஹீரோவாக நடித்த படம் எது தெரியுமா ? கடைசி வரை ஏன் கல்யாணமே பண்ணல?

By Ramya s  |  First Published Mar 30, 2024, 8:26 AM IST

தமிழ் சினிமாவில் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு தனி அடையாளம் கொடுத்த நடிகர்களில் இவர் முக்கியமானவர். 


பிரபல நடிகர் டேனியல் பாலாஜி நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் சினிமாவில் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு தனி அடையாளம் கொடுத்த நடிகர்களில் இவர் முக்கியமானவர். 

டேனியல் பாலாஜி திரைத்துறையில் கால்பதித்தது நடிகராக அல்ல.. அவர் கமல்ஹாசனின் மருதநாயகம் படத்தில் புரொட்க்ஷன் மேனேஜராக பணியாற்றினார். சித்தி சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த சீரியலில் டேனியல் என்ற கதாப்பாத்திரத்தில் தனி முத்திரை பதித்ததால் பாலாஜி என்ற பெயர் டேனியல் பாலாஜி என்று மாறியது. பின்னர் அலைகள் சீரியலிலும் நடித்திருந்தார்.

Latest Videos

Daniel Balaji RIP: டேனியல் பாலாஜி மரணத்திற்கு இதுதான் காரணமா? இவருக்கும் நடிகர் முரளிக்கும் என்ன தொடர்பு?

பின்னர் ஸ்ரீ காந்த் நடிப்பில் வெளியான ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் டேனியல் பாலாஜி. தொடர்ந்து காதல் கொண்டே படத்திலும் சிறிய கதாப்பாத்திரத்தில் டேனியல் பாலாஜி நடித்திருப்பார். 
பின்னர் கௌதம் மேனனின் காக்க காக்க படத்தில் சூர்யாவின் நண்பராகவும், காவல்துறை அதிகாரியாகவும் நடித்திருப்பார். இந்த படத்தில் அவரின் நடிப்பு கௌதம் மேனனை கவர்ந்துவிட, வேட்டையாடு விளையாடு படத்தில் முக்கிய வில்லனாக அவரை நடிக்க வைத்தார். இந்த படத்தில் அவரின் நடிப்பு இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதே போல் அவருக்கு மற்றொரு பெரும் வரவேற்பை கொடுத்த மற்றொரு படம் தான் பொல்லாதவன். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் தனக்கே உரிய பாணியில் நடிப்பில் அசத்தி இருப்பார் டேனியல் பாலாஜி.
இதை தொடர்ந்து அவர் ஸ்ரீகாந்த் இயக்கிய முத்திரை படத்தில் நிதின் சத்யா உடன் இணைந்து நாயகனாக நடித்தார். 

எனினும் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே மீண்டும் வில்லன் கேரக்டரில் நடிக்க தொடங்கினார். மறுமுகம், ஞான கிறுக்கன், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, பைரவா, இப்படை வெல்லும், மாயவன் என படங்களில் நடித்தார்.

Daniel Balaji Passed Away: திரையுலகினர் அதிர்ச்சி.. டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம்..!

அதிக படங்களில் நடிப்பதை விட தனக்கு ஏற்ற முக்கியத்துவம் வாந்த கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அப்படி அவர் நடித்த வடசென்னை படம் மற்றொரு முக்கிய படமாக அவரின் கெரியரில் அமைந்தது.
தொடர்ந்து பிகில், ஆனந்தம் விளையாடும் வீடு ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த படம் அரியவன். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களிலும் டேனியல் பாலாஜி வில்லன் கேரக்டரில் நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

மறைந்த நடிகர் முரளி உறவினர் தான்  டேனியல் பாலாஜி. அதாவது முரளியின் மாமன் மகன் தான் டேனியல் பாலாஜி. 49 வயதாகியும் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. தனது தாய் தனக்கு திருமணம் செய்து வைக்க எவ்வளவோ முயன்றாலும் ஏதோ ஒரு காரணத்தால் இவருக்கு திருமணம் செட்டாகவே இல்லை. 25 வயதிலேயே தனக்கு திருமணம் செட்டாகாது என்று புரிந்துகொண்டதாக டேனியல் பாலாஜி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தனது நடிப்பு, வசன உச்சரிப்பு மூலம் அனைவரையும் கவர்ந்த டேனியல் பாலாஜியின் மறைவுக்கு ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

click me!