500 முதல்.. 50,000 வரை! முதல் படத்திற்கே அதிக சம்பளம் வாங்கிய அதிர்ஷ்டசாலி கோலிவுட் டாப் ஹீரோ யார் தெரியுமா?

By Ramya sFirst Published Jul 5, 2024, 10:20 AM IST
Highlights

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களாக வலம் வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக வலம் வரும் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் இன்று ஒரு படத்திற்கே கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். இந்த நடிகர்களின் மார்க்கெட், பாக்ஸ் ஆபிஸ் வெற்றி உள்ளிட்ட பல காரணிகளை கொண்டு ஹீரோக்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த பின் நடிகர்கள் தங்கள் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்துகின்றனர். சிலர் லாபகரமான நடிகர்களாகவும் கருதப்படுகின்றனர். 

அந்த வகையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  நடித்து வரும் கூலி படத்திற்கு ரூ.260 முதல் ரூ.280 கோடி வரை சம்பளம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் உலக நாயகன் கமல்ஹாசனும் இந்தியன் 2 படத்திற்கு ரூ.150 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. தளபதி விஜய் கோட் படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் அஜித் குட், பேட், அக்லி படத்திற்கு ரூ.163 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம். ஆனால் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களாக வலம் வரும் இந்த நடிகர்கள் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Videos

ரஜினிகாந்த் : 

அபூர்வ ராகங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ரஜினிகாந்த் 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார். தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் நடிப்பு மூலம் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது 71 வயதாகும் ரஜினி, இன்றும் அதே துடிப்பு, ஸ்டைலுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் பாக்ஸ் ஆபிஸ் கிங், ரெக்கார்டு மேக்கராகவும் ரஜினி இருக்கிறார். இதன் காரணமாகவே ரஜினிகாந்திற்கு அதிக சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருகின்றனர்.  தற்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் மாறி உள்ளார். ஆனால் ரஜினி தனது முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்திற்கு வெறும் ரூ.5000 மட்டுமே சம்பளம் வாங்கி உள்ளார்.

இதனிடையே சில படங்களில் நடித்தாலும் 16 வயதினிலே படத்தில் ரூ.3000 பேசி ரூ.2500 மட்டுமே ரஜினிக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டதாம். இதை தொடர்ந்து ரஜினி ஹீரோவாக நடித்த பைரவி படத்தில் நடிக்க அவர் ரூ.50000 கொடுக்கப்பட்டதாம். அதன் பின்னர் லட்சங்களில் சம்பளம் வாங்க தொடங்கிய ரஜினி இன்று ஆசியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். 

கமல்ஹாசன் :

உலகநாயகன் கமல்ஹாசன் தனது 5-வது வயதிலேயே திரையுலகில் அறிமுகமானவர். 1960-ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணமா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அந்த படத்திற்கு ரூ.500 சம்பளம் வாங்கினார். 60 ஆண்டுகளுக்கு மேலும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் கமல்ஹாசன் இந்தியாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். வெறும் நடிகர் என்று மட்டும் அவரை சுருக்கிவிட முடியாது. இயக்குனர், நடனக் கலைஞர், பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர்.

விஜய் :

நடிகர் விஜய் இன்று தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஆரம்பத்தில் தனது தோற்றத்திற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் விஜய் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அந்த படத்திற்கு முன்னரே விஜய் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அப்படி தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய வெற்றி என்ற படத்தின் விஜய் சிறு வயது விஜயகாந்தாக நடித்திருப்பார். அந்த படத்திற்கு ரூ.500 மட்டுமே விஜய்க்கு சம்பளமாக கொடுக்கப்பட்டது. 

அஜித் :

இன்று தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். ஒருகாலத்தில் தனது வசீகர தோற்றத்தால் பெண்களின் மனதை கவர்ந்து ரொமாண்டி சாக்லேட் பாயாக வலம் வந்த அவர், தற்போது மாஸ் ஹீரோவாக மாறி தனக்கென லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருகிறார். நடிகர். அஜித்தின் முதல் படமான அமராவதி படத்திற்கு ரூ. 5000 சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

சூர்யா :

தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்திற்கு தனது நடிப்பு, நடனம் ஆகியவற்றுக்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். எனினும் தனது கடுமையான உழைப்பின் அத்தனை விமர்சனங்களையும் சுக்குநூறாக உடைத்து இன்று சிறந்த நடிகர்கள் ஒருவராக மாறி உள்ளார். இன்று ஒரு படத்திற்கு சராசரியாக ரூ.50 கோடி வரை சம்பளம் வாங்கும் சூர்யா, தனது முதல் படமான நேருக்கு நேர் படத்தில் ரூ.50,000 சம்பளம் வாங்கினாராம். 

click me!