Latest Videos

போராடியும் கிடைக்காத டைட்டில்.. 3ம் இடத்தில் மாயா - கடுப்பில் சூப்பர் ஸ்டாரின் டயலாக்கை சொல்லி ஆறுதல்!

By Ansgar RFirst Published Jan 14, 2024, 8:58 PM IST
Highlights

Maya S Krishanan Insta Post : இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் மிகவும் கடுமையான போட்டியாளராக திகழ்ந்தவர் தான் பிரபல நடிகை மாயா. ஆனால் அவருக்கு மூன்றாவது இடம் தான் கிடைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் பிறந்த பிரபல நடிகை மாயா எஸ் கிருஷ்ணன் வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன்பே ஒரு மிகச்சிறந்த மேடை கலைஞராக திகழ்ந்து வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல குழந்தைகள் மருத்துவமனையில் அங்குள்ள நோய்வாய்ப்பட்ட சிறுவர்களை மகிழ்விக்கும் ஒரு "Hospital Clown" ஆகவும் மாயா இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

பல மேடை நாடகங்களில் நடித்து புகழ்பெற்ற அவருக்கு, கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளரும் இயக்குனருமான ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் உருவான "வானவில் வாழ்க்கை" என்கின்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன் போன்ற பல திரைப்படங்களில் அவர் தொடர்ச்சியாக நடித்து வந்தார். 

"குறுக்க வந்த கௌஷிக்".. டைட்டில் வின்னரை கலாய்த்த பிரதீப் ஆண்டனி - அர்ச்சனாவிற்கு சொன்ன வித்யாசமான வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 2.0, உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம், தளபதி விஜய் அவர்களின் லியோ, ஆகிய மூன்று திரைப்படங்களிலும் இவர் சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒளிபரப்பாக துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் இவர் போட்டியாளராக பங்கேற்றார். 

105 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் மிகவும் போல்டான மற்றும் வலுவான போட்டியாளராக இவர் திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரதீப் ஆண்டனியின் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாகவும் இவர் கூறப்பட்டார். பூர்ணிமா மற்றும் மாயா ஆகிய இருவரும் மற்றும் சிலரும் bully Gang என்று அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த சூழ்நிலையில் இன்று இரவு ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில், கிராண்ட் பினாலேவில் அர்ச்சனா தான் வெற்றியாளராக அறிவிக்கப்பட உள்ளார் என்றும், மாயாவிற்கு மூன்றாம் இடம் தான் கிடைத்துள்ளது என்றும் தகவல் என் வெளியாகி வருகிறது. இதை பல முன்னணி ஊடகங்கள் உறுதி செய்துள்ள நிலையில், நடிகை மாயா அவர்களும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவின் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். 

105 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் பயணித்தும் அவரால் மூன்றாம் இடம் மட்டுமே பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வெளியிட்ட பதிவில் "கையில் என்ன கொண்டு வந்தோம்.. கொண்டு செல்ல" என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய பாடல் வரிகளை வெளியிட்டு தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் அவர் பல மனங்களை வென்றுள்ளார் என்று கூறி அவருடைய ரசிகர்கள் அவரை தேற்றி வருகின்றனர். 

நயன்தாரா - விக்னேஷ் சிவன் பிரிவது உறுதி.! சமந்தா வாழ்க்கையை பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிடரின் கணிப்பு!

click me!