"குறுக்க வந்த கௌஷிக்".. டைட்டில் வின்னரை கலாய்த்த பிரதீப் ஆண்டனி - அர்ச்சனாவிற்கு சொன்ன வித்யாசமான வாழ்த்து!

Ansgar R |  
Published : Jan 14, 2024, 07:23 PM IST
"குறுக்க வந்த கௌஷிக்".. டைட்டில் வின்னரை கலாய்த்த பிரதீப் ஆண்டனி - அர்ச்சனாவிற்கு சொன்ன வித்யாசமான வாழ்த்து!

சுருக்கம்

Bigg Boss Pradeep Antony : இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரபல சின்னத்திரை நடிகை அர்ச்சனா டைட்டில் வின்னராக மாறியுள்ளார். மாயாவிற்கு மூன்றாம் இடமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன். இன்று இரவு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளரை அதிகாரபூர்வமாக அறிவிக்க போகிறார்கள் என்றாலும் கூட, ஏற்கனவே அர்ச்சனா தான் டைட்டில் வின்னராக மாறியுள்ளார் என்கின்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு வைல்ட் கார்டு போட்டியாளர் டைட்டிலை வென்றுள்ளது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. மொத்தம் இருந்த 105 நாட்களில், அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 28வது நாளில் தான் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக மாறி உள்ள அர்ச்சனாவிற்கு 50 லட்சம் ரூபாயுடன் சேர்த்து ஒரு சொகுசு காரையும் பரிசளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஆசிய திரைப்பட விருதுகளில் 4 கேட்டகிரியில் நாமினேட் ஆகியுள்ள 'பாரடைஸ்'!

இது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக அர்ச்சனாவிற்கு சுமார் 13 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், இந்த சூழலில் தனது வீட்டிற்கு நடிகை அர்ச்சனா சுமார் 63 லட்சத்தை கொண்டு செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க இந்த நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நடிகர் பிரதீப், அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்த தனது கருத்துக்களை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறார். 

அவர் நேற்று பதிவிட்ட ஒரு ட்விட்டர் பதிவில், ஒரு பிரபலமான செய்தி நிறுவனம் அர்ச்சனா வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. அது உண்மையாகத்தான் இருக்கும், அர்ச்சனா நல்லா இரு என்று கூறி தனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். அதே சமயம் அவர் அந்த ட்விட்டர் பதிவில் #KurukaVanthaKowshik என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார். 

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இடையில் வந்த கௌஷிக் தான் அர்ச்சனா என்று கூறி அவரை கலாய்த்துள்ளார். 

"அடுத்த சுப்பிரமணி ரெடி".. ஹீரோவாக உருமாறிய புகழ்.. கைகொடுத்த மக்கள் செல்வன் - Mr Zoo Keeper டீசர் இதோ!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!