உயிர் பிரியும் கடைசி நிமிடத்தில் பாடகர் கேகே..பதறவைக்கும் வீடியோ உள்ளே!

Kanmani P   | Asianet News
Published : Jun 01, 2022, 10:15 AM ISTUpdated : Jun 01, 2022, 10:29 AM IST
உயிர் பிரியும் கடைசி நிமிடத்தில் பாடகர் கேகே..பதறவைக்கும் வீடியோ உள்ளே!

சுருக்கம்

மறைந்த பிரபல பாடகர் கேகே மேடையில் அசௌகரியமாக உணர்ந்ததை அடுத்து கொல்கத்தா CMRI மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தருணம் .

பிரபல பாலிவுட் பாடகர் கேகே  செவ்வாய்க்கிழமை இரவு கொல்கத்தாவில் காலமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்கு வயது 53, அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் நேற்று இரவு தெற்கு கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மஞ்சாவில் ஒரு கல்லூரி ஏற்பாடு செய்திருந்த கச்சேரியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஃபர்ப்பாம்  செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அசௌகரியமாக உணர்ந்த  கேகே தனது மைக்கை அருகில் உள்ளவரிடம் கொடுத்துவிட்டு மேடையின் பின்பக்கமாக கைத்தாங்கலாக அழைத்து செல்லப்படுகிறார். பின்னர் ஹோட்டலுக்கு சென்ற அவர் மாடிப்படிகளில் மயக்கமுற்று விழுந்ததை அடுத்து  கொல்கத்தா CMRI மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது  அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியை நடத்தி முடித்தார்.
 மேடையில் கேகே வின் கடைசி தருண வீடியோ வைரலாகி வருகிறது.

 

3 தலைமுறை பாடகராக ரசிகர்களை ஈர்த்து வந்த கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், 90களின் பிற்பகுதியில் பிரபல பாடகராக வலம் வந்தவர். இவர்தமிழில் விஜய்,அஜித், பிரபு தேவா உள்ளிட்டோரின் 90ஸ் ஹிட்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர். ஸ்ட்ராபெரி கண்ணே , உயிரே உயிரே' போன்ற பாடல்களுக்குப் பெயர் பெற்றவர். கேகே ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்துள்ளார். இவரின் குரலில்  மனதை ஈர்த்த பாடல்களின் தொகுப்பு இதோ...

RIPKK : காதல்.. கானம்.. கேகே..! 'ஸ்ட்ராபெரி கண்ணே' முதல் 'உயிரின் உயிரே' வரை மறக்கமுடியாத பாடல்கள்..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: வெடித்த உண்மை! மாமனாரின் தலையில் போட அண்டாவை தூக்கிய சரவணன்!
மாமனார் - மருமகன் மோதல்; குடும்ப சண்டையால் பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2; ஹைலைட்ஸ்!