
கடந்த மூன்று தசாப்தங்களாக இந்திய இசை ஆர்வலர்களுக்கு பல வெற்றிகளை வழங்கிய பாடகர் கேகே, 53 வயதில் காலமானார். செவ்வாயன்று கொல்கத்தா நஸ்ருல் மஞ்சாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது காந்த குரலால் கட்டி இழுத்திருந்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் தனது ஹோட்டலுக்குச் சென்ற கேகேவுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மண்ணுலகைவிட்டு மறைந்த பிரபல பாடகரின் கேகே வின் கடைசி பர்பார்மன்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை கண்ணீருடன் பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.
கேகே தனது முதல் ஆல்பமான பால், 1999 இல் வெளியிட்டார். பாடகர்-இசையமைப்பாளருமான கேகே மற்ற மொழிகளை காட்டிலும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.டெல்லியில் பிறந்த இவரது நேரடி நிகழ்ச்சிகளுக்காகவும் அறியப்பட்டவர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் எட்டு மணி நேரத்திற்கு முன்பு கொல்கத்தாவில் நடந்த அவரது இசை நிகழ்ச்சியின் புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இவரது மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி,கே.கே.வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், "கேகே என்று அழைக்கப்படும் பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவு வருத்தமளிக்கிறது. அவரது பாடல்கள் அனைத்து வயதினரையும் கவர்ந்ததால் பலவிதமான உணர்வுகளை பிரதிபலித்தது. அவரை எப்போதும் நினைவில் கொள்வோம். அவரது பாடல்கள் மூலம். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி."
அதேபோல யூனியன் மினிஸ்டர் மற்றும் ஏசியா நெட்வொர்க்கின் எம்.டியுமான ராஜீவ் சந்திரசேகர், தனது ட்வீட்டர் பக்கத்தில், "கேகே என்று அழைக்கப்படும் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவைக் கேட்டு வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம்சாந்தி " என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.