Actor Bala : நடிகர் பாலா, தனது முன்னாள் மனைவி, இசையமைப்பாளர் ஒருவரை காதலிப்பது குறித்து கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சிவா. இவருக்கு பாலா என்கிற சகோதரர் உள்ளார். இவர் சிவா இயக்கிய வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருந்தார். நடிகர் பாலா, கடந்த 2010-ம் ஆண்டு அம்ரிதா சுரேஷ் என்கிற மலையாள பாடகியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமாகி 12 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பாலா - அம்ரிதா ஜோடி கடந்த ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்து கிடைத்த உடனே வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்துகொண்டார் நடிகர் பாலா.
பாலாவின் முன்னாள் மனைவியான பாடகி அம்ரிதா சுரேஷ், மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான கோபி சுந்தருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் இருவரும் அடுத்தடுத்து புகைப்படங்களை வெளியிட்டு தாங்கள் காதலிப்பதை உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் நடிகர் பாலா, தனது முன்னாள் மனைவியின் புதிய காதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ரசிகர் ஒருவர் இதுகுறித்து கேட்டபோது, தான் தனது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்வதாக தெரிவித்த பாலா, தனது மாஜி மனைவி மகிழ்ச்சியாக இருக்க பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். விரைவில் அம்ரிதாவுக்கும் இசையமைப்பாளர் கோபி சுந்தருக்கு திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்...Raiza : பிகினி உடையில் கவர்ச்சி குளியல் போட்டு.. ரசிகர்கள் மனதை குளிர வைத்த ரைசா- கிக்கான கிளாமர் கிளிக்ஸ் இதோ