Poonam Pandey : கோவாவில் உள்ள சப்போலி அணைப்பகுதியில் நடிகை பூனம் பாண்டே நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் பூனம் பாண்டே. சாம் பாம்பே என்பவரை காதலித்து வந்த இவர் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் தேன்நிலவை கொண்டாட இருவரும் ஜோடியாக கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு சாம் பாம்பே தன்னை அடித்து துன்புறுத்தியதாக போலீஸில் புகார் அளித்து அதிர்ச்சி கொடுத்தார் பூனம் பாண்டே.
இதுதவிர கோவாவில் உள்ள சப்போலி அணைப்பகுதியில் நடிகை பூனம் பாண்டே நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், தற்போது நடிகை பூனம் பாண்டே மற்றும் சாம் பாம்பே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் அவர்கள் இருவரும் கைது செய்யப்படும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது. பூனம் பாண்டேவும், சாம் பாம்பேவும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பூனம் பாண்டேவை அடித்து துன்புறுத்தியதன் காரணமாக சாம் பாம்பேவை மும்பை போலீசார் கைது செய்த சம்பவமும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.. CWC Bala : குக் வித் கோமாளி பாலாவுக்கு என்னாச்சு... நள்ளிரவில் ரோட்டோரம் அமர்ந்து சாப்பிடும் வீடியோ வைரல்