Yaanai Press meet : அருண் விஜய் நடித்துள்ள யானை படத்தின் பிரஸ் மீட்டில் கலந்துகொண்ட இயக்குனர் ஹரி Flowல கெட்ட வார்த்தை பேசி அனைவருக்கு ஜெர்க் கொடுத்தார்.
சாமி, வேல், ஆறு, சிங்கம் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் ஹரி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் யானை. இப்படத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக கேஜிஎஃப் பட நடிகர் கருடா ராம் நடித்துள்ளார்.
ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ், நடிகை அம்மு அபிராமி, பிக்பாஸ் பிரபலம் சஞ்சீவ், நடிகர் சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
யானை படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூன் 17-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், யானை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதையொட்டி நடந்த பிரஸ் மீட்டிலும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அதில் இயக்குனர் ஹரி Flowல கெட்ட வார்த்தை பேசி அனைவருக்கு ஜெர்க் கொடுத்தார்.
இப்படத்தில் இருக்கும் ஆக்ஷன் காட்சிகளைப் பற்றி பேசும்போது சற்று உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்தார் ஹரி. அப்போது ஹீரோ அடிப்பதைப் பற்றி பேசுகையில் Flowல கெட்ட வார்த்தை பேசி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் அனைவரும் சிரித்ததைப் பார்த்து பேசுவதை நிறுத்திய ஹரி, என்ன சொன்னேன் நான் இப்போ என கேட்க அவரது ரியாக்ஷனை பார்த்து அனைவரும் சிரித்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... கார்த்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகையுடன் ரொமான்ஸ் பண்ணும் சூர்யா - வைரலாகும் புகைப்படம்
Oru flow la vanthuruchi🤣🤣🤣 🔥🔥 pic.twitter.com/8RGjr8FmAg
— saravanan k (@tendercoco_nut)