'சரக்கடிக்கும் காக்கா' வெளியானது விக்ரமின் 'Wasted' லிரிக் சாங்!

By Kanmani PFirst Published May 30, 2022, 9:16 PM IST
Highlights

கமலஹாசனின்  வரவிருக்கும் விக்ரம் படத்திலிருந்து Wasted என்னும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு 4 வருடங்கள் கழித்து கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.கைதி , மாஸ்டர் படங்களை தொடர்ந்து  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கமலுடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

தற்போதைய மியூசிக் ஜாம்பவானாக இருக்கும் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் கமல் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் வில்லங்களாக நடித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யா கிளைமேக்சில் கமலின் வாரிசாக தோன்றுவார். இதையடுத்து உருவாகும் அடுத்த பார்ட்டில் சூர்யா தான் நாயகனாக நடிப்பார் என சொல்லப்படுகிறது.

இந்த படத்திலிருந்து சமீபத்தில் வெளியான டிரைலர் மற்றும் பாடல்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக வெளியான பத்தல பத்தல என்னும் பாடலை அடுத்து டிரைலரும் சர்ச்சையில் சிக்கியது.  இதில் இடம்பெற்ற ஆபாச வசனம்  சமூக வலைதளங்களிலும் பேசுபொருள் ஆனது.

விக்ரம் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் படத்தின் ப்ரோமோஷனை படு வேகமாகவும் பிரமாண்டமாகவும் செய்து வருகிறது. டிக்கெட் முன் பதிவு துவங்கி விட்ட நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து வேஸ்ட்டேட் என்னும் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

 

click me!