Arun Vijay's Yaanai Movie Trailer Released : அருண்விஜய் தற்போது நடித்து முடித்துள்ள யானை படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.
சூர்யாவை வைத்து சிங்கம், சிங்கம் 2 என பிரமாண்ட படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த ஹரி. தற்போது அருண் விஜயை வைத்து யானை என்னும் படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில், ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார், சமுத்திரக்கனி, யோகி பாபு, அம்மு அபிராமி, கேஜிஎஃப் புகழ் ராமச்சந்திர ராஜு மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அருண் விஜய்யின் யானை முன்னதாக மே 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டபின்னர் இப்படம் ஜூன் 17ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த செய்தியை அறிவிக்கும் வகையில் படத்தின் புதிய போஸ்டரை அருண் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.. "விநியோகஸ்தர்களின் வேண்டுகோளின் பேரில் வெளியீட்டுத் தேதியை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில் அருண் விஜய் கலக்கியுள்ள யானை படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதில் ஹரியின் வழக்கமான நாயகர்களின் கெட்டப்பில் இருக்கும் ஹீரோவின் ஆக்சன் காட்சிகள். பெரும்பாலான படங்களில் இடம்பெறும் கடற்கரை பைட்டுகள் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளுடன் மாஸ் காட்டியுள்ளது. ட்ரைலர் இதோ..