Director Hari : சூர்யா உடன் சண்டையா... ‘அருவா’ படம் டிராப் ஆனது ஏன்? - மவுனம் கலைத்த இயக்குனர் ஹரி

By Asianet Tamil cinema  |  First Published May 31, 2022, 9:23 AM IST

Director Hari : யானை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ஹரியிடம் அருவா படம் பற்றியும், யானை படத்தின் கதை சூர்யாவுக்காக எழுதப்பட்டதா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.


தமிழ் திரையுலகில் பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஹரி. குறிப்பாக நடிகர் சூர்யா மாஸ் ஹீரோவாக உருவெடுத்ததற்கு இவர் தான் காரணம். ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த வேல், ஆறு மற்றும் சிங்கம் படங்கள் பிரம்மாண்ட வெற்றியை பெற்றதோடு நடிகர் சூர்யாவின் மாஸ் அந்தஸ்தையும் உயர்த்தியது.

5 படங்களில் இணைந்து பணியாற்றிய இவர்கள் ஆறாவதாக அருவா என்கிற படத்தில் கூட்டணி அமைத்தனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளதாகவும், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷி கன்னா நடிக்க உள்ளதாக அறிவித்திருந்தனர். ஆனால் திடீரென இப்படம் நிறுத்தப்பட்டது.

Tap to resize

Latest Videos

இதையடுத்து அருண்விஜய்யின் யானை படத்தை இயக்கினார் ஹரி. அதிரடி, ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் ராதிகா, அம்மு அபிராமி, சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம், வருகிற ஜூன் 17-ந் தேதி ரிலீசாக உள்ளது.

யானை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது இயக்குனர் ஹரியிடம் அருவா படம் பற்றியும், யானை படத்தின் கதை சூர்யாவுக்காக எழுதப்பட்டதா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இல்லை என பதிலளித்த ஹரி, அருவா படம் அப்படியே தான் இருப்பதாக கூறினார். சில காரணங்களுக்காக அப்படம் தள்ளிப்போய் இருப்பதாகவும், எப்போ வேணுனாலும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக ஹரி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... SK 20 Release date : ஹாட்ரிக் ஹிட் கொடுக்க ரெடியான சிவகார்த்திகேயன்... SK 20 படத்தின் ரிலீஸ் தேதி வந்தாச்சு

click me!