Raiza : பிகினி உடையில் கவர்ச்சி குளியல் போட்டு.. ரசிகர்கள் மனதை குளிர வைத்த ரைசா- கிக்கான கிளாமர் கிளிக்ஸ் இதோ
Raiza : கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ரைசா, அங்கு நீச்சல் குளத்தில் கருப்பு நிற பிகினி உடை அணிந்தவாறு தனது தோழியுடன் உற்சாகமாக குளியல் போடும் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ரைசா வில்சன். மாடல் அழகியான இவருக்கு இந்நிகழ்ச்சிக்கு பின்னர் பட வாய்ப்புகள் குவிந்தன.
அதன்படி இவர் முதலாவதாக நடித்த படம் வேலையில்லா பட்டதாரி 2. இப்படத்தில் சைடு ரோலில் நடித்திருந்த இவர், இளன் இயக்கத்தில் யுவன் தயாரிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
பியார் பிரேமா காதல் படத்தில் தனது சக பிக்பாஸ் போட்டியாளரான ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரைசா. கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான இப்படம் இளசுகள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது.
இதையடுத்து இயக்குனர் பாலா இயக்கிய வர்மா படத்தில் 2-வது ஹீரோயினாக நடித்தார். பாலாவின் மேக்கிங் பிடிக்காததால் இப்படத்தை ரிலீஸ் செய்யாமல் அப்படியே முடக்கி விட்டனர். இதையடுத்து வேறு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்கிற படத்தை இயக்கி வெளியிட்டனர்.
தற்போது இவர் கைவசம் தி சேஸ், என்கிற படம் உள்ளது. இப்படத்தில் கதையின் நாயகியாக ரைசா நடித்துள்ளார். கார்த்திக் ராஜு இயக்கியுள்ள இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதுதவிர காதலிக்க நேரமில்லை என்கிற படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ரைசா.
இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் ரைசா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அதில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார். சில சமயங்களில் பிகினி உடையிலும் அலப்பறை செய்வார் ரைசா.
அந்த வகையில் தற்போது கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ரைசா, அங்கு நீச்சல் குளத்தில் கருப்பு நிற பிகினி உடை அணிந்தவாறு தனது தோழியுடன் உற்சாகமாக குளியல் போடும் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்.... Poonam Pandey : பொதுஇடத்தில் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்திய பிரபல நடிகை மீது அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்