கிங்ஸ்டனும்.. சபிக்கப்பட்ட கடலும் - ஒரு மாறுபட்ட முயற்சி.. களமிறங்கு ஜி.வி.பிரகாஷ் - துவக்கி வைத்த உலக நாயகன்!

Ansgar R |  
Published : Oct 10, 2023, 07:32 PM IST
கிங்ஸ்டனும்.. சபிக்கப்பட்ட கடலும் - ஒரு மாறுபட்ட முயற்சி.. களமிறங்கு ஜி.வி.பிரகாஷ் - துவக்கி வைத்த உலக நாயகன்!

சுருக்கம்

கடந்த 2006 ஆம் ஆண்டு தனது 19 வது வயதில் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகில் களமிறங்கிய இசையமைப்பாளர் தான் ஜி.வி பிரகாஷ் குமார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் சிறந்து விளங்கி வருகிறார் இவர்.

இந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் ஜி.வி.பி இசையில் கேப்டன் மில்லர். தங்கலான், எமர்ஜென்சி, ஜப்பான் கள்வன், சைரன் போன்ற பல திரைப்படங்கள், பல்வேறு மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டு முதல் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகில் பயணித்து வந்தாலும் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் கதையின் நாயகனாக அறிமுகமானார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தொடர்ச்சியாக சுமார் 17 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் தனது பணியை சிறப்பாக செய்து வரும் ஜீவி பிரகாஷ் குமார் தான் தயாரிக்க உள்ள முதல் திரைப்படம் குறித்த அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளார். 

அம்மாவை எரித்து கொன்ற அப்பா..! அவரும் குடிச்சே செத்துட்டாரு.. பலரும் அறிந்திடாத பிரதீப் ஆண்டனியின் சோகக்கதை!

Kingston and the Cursed Sea என்கின்ற திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் இந்த திரைப்படத்திற்கு கிளப் அடித்து துவங்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஜிவி பிரகாஷ் குமார் அவர்களுடைய 25வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. கமல் பிரகாஷ் என்பவர் இயக்க, இந்த திரைப்படத்தில் நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் களமிறங்கியுள்ளார் ஜிவி பிரகாஷ். 

இந்தியாவில் வெளியாகும் முதல் கடல் சார்ந்த ஹாரர் திரைப்படம் இதுவென்று கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துவக்கத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.

Ethirneechal: ஜனனிக்கு காத்திருந்த அதிர்ச்சி! மீண்டும் காணாமல் போன குணசேகரன்.. எதிர்நீச்சல் அப்டேட்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கிரிஷால் முத்து - மீனா இடையே வெடிக்கும் பிரச்சனை; கல்யாணியால் கதிகலங்கி நிற்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை
Rajinikanth Net Worth : எளிமையின் சிகரம் ரஜினிகாந்த்... யம்மாடியோ இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?