
Killer Preethi Asrani First Look : எஸ்.ஜே. சூர்யா பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள படம் 'கில்லர்'. இப்படத்தில் நாயகியாக நடிக்கும் பிரீத்தி அஸ்ரானியின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரீத்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் இந்தப் படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் மற்றும் ஏஞ்சல் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.
'ஒன் ஃபார் லவ், ஒன் ஆன் எ மிஷன்' என்ற டேக் லைனுடன் படத்தின் தலைப்பும் முதல் தோற்றமும் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமா தயாரிப்பில் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் மீண்டும் களமிறங்குகிறது. இணை தயாரிப்பாளர்கள்: பைஜு கோபாலன், வி.சி. பிரவீன். நிர்வாக தயாரிப்பாளர்: கிருஷ்ணமூர்த்தி. ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பது இதுவே முதல் முறை. வாலி, குஷி, நியூ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.ஜே. சூர்யா 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக வருகிறார் என்பதும் இந்தப் படத்தின் சிறப்பம்சம்.
பெரிய நடிகர்களை வைத்து இந்தப் படத்தை உருவாக்குகிறார். அதிக பொருட்செலவில் தயாராகும் இந்த ஆக்ஷன் த்ரில்லர் 5 மொழிகளில் வெளியாகும். பான் இந்தியப் படமாக உருவாகும் 'கில்லர்' படத்தில் இந்திய சினிமாவின் சிறந்த திறமையாளர்கள் பணியாற்றுகின்றனர்.
பான் இந்தியப் படமான 'கில்லர்' தவிர, மலையாளத்தில் சுரேஷ் கோபி நடிக்கும் 'ஒற்றக்கொம்பன்', ஜெயசூர்யா நடிக்கும் 'கத்தனார்', திலீப் நடிக்கும் 'பா.பா.பா', ஜெயராம் - காலிதாஸ் ஜெயராம் - ஜி. பிரஜித் கூட்டணியின் 'ஆசைகள் ஆயிரம்', எம். மோகனன் - அபிலாஷ் பிள்ளை கூட்டணியின் 'சோட்டானிக்கரை லட்சுமிகுட்டி' போன்ற பெரிய படங்கள் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.