
Kavignar Poovai Senguttuvan Passed Away : எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்காக பாடல் எழுதிய கவிஞர் பூவை செங்குட்டுவன் தனது 90ஆவது வயதில் காலமானார். வயது முதிர்வின் காரணமாக அவர் இயற்கை எய்தியதாக சொல்லப்படுகிறது. சினிமாவில் மட்டும் கிட்டத்தட்ட 1000க்கும் மேற்படட் பாடல்களை எழுதிய பூவை செங்குட்டுவன், கிட்டத்தட்ட 4000க்கும் மேற்பட்ட சுயாதீனப் பாடல்கள் எழுதியுள்ளார். கடந்த 1980ஆம் ஆண்டு கவிஞர் பூவை செங்குட்டுவனுக்கு கலைமாமணி விருது கொடுக்கப்பட்டது.
இவர் எழுதிய திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா என்ற பாடலும், நான் உங்கள் வீட்டுப்பிள்ளை என்ற பாடலும் காலத்தால் அழியாதவை. குறிப்பாக இவர் எழுதிய 'நாலும் தெரிந்தவன் நிலவுக்கே போகலாம்…’ என்ற பாடல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட பாடலாகும். அந்த பாடலானது ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த போது ஒலிபரப்பு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் 5 முதல்வர்களுக்கு பாடல் எழுதிய பெருமை இவருக்கு உண்டு. அறிஞர் அண்ணாவிற்கு 'அறிஞர் அண்ணா ஆட்சிதானிது' என்ற பாடலை எழுதினார். இந்தப் பாடலானது அவரது பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவும், பொதுக்கூட்டம் நிறைவுபெறும் போதும் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
இதே போன்று கலைஞர் கருணாநிதிக்கு 'கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதியாகும் ' என்ற பாடலும், எம்.ஜி.ஆருக்காக. 'நான் உங்கள் வீட்டுப்பிள்ளை' என்ற பாடலும், ஜெயலலிதாவிற்காக ஒரு பாடலும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.