அஜய் தேவ்கனுடன் குஷ்பு..என்ன விஷயம் தெரியுமா?

By Kanmani P  |  First Published Aug 7, 2022, 1:38 PM IST

 ஹாலிவுட் நாயகன் அஜய் தேவ்கன்னுடன் தான் இருக்கும் புகைப்படத்தை குஷ்பூ பகிர்ந்துள்ளார். இரண்டு படங்களை பகிர்ந்து கொண்ட இவர் உண்மையில் நான் ஒரு ரசிகப் பெண்மணி என எழுதியுள்ளார்.


90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த குஷ்பூ, 'பிரபு, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் டாப் டென் நடிகையாக இருந்தவர். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், தனது உடல் எடையை குறைத்து அவ்வப்போது அழகான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வாழ்த்துக்களை பெற்று வருகிறார். தற்போது வாரிசு படம் மூலம் மீண்டும் விஜயுடன் இணைந்துள்ளார் குஷ்பூ. இந்த படத்தை டோலிவுட் இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். சென்டிமென்ட் கமர்சியலாக உருவாகி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா, பாபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷ்யாம் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...நாடாளுமன்றத்தில் ராக்கெட்ரி... பாராட்டு மழையில் மாதவன்!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tap to resize

Latest Videos

A post shared by Kushboo Sundar (@khushsundar)

மேலும் செய்திகளுக்கு...போதைக்கு அடிமையான நடிகை... தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்

இந்நிலையில் ஹாலிவுட் நாயகன் அஜய் தேவ்கன்னுடன் தான் இருக்கும் புகைப்படத்தை குஷ்பூ பகிர்ந்துள்ளார். அஜய் தேவ்கனின் இரண்டு படங்களை பகிர்ந்து கொண்டு எழுதிய குஷ்பூ,  என் ஹீரோவை சந்திப்பது ஒரு கனவு நினைவானது போல் உள்ளது. அவர் தனது எளிமை, பணிவு மற்றும் பூமிக்குரிய அணுகுமுறையால் என்னை தடுமாற வைத்தார். இதில் போலி எதுவும் இல்லை.  இவருக்கு உண்மையில் நான் ஒரு ரசிகப் பெண்மணி. உங்கள் நேரத்தையும் அரவணைப்பும் என் மீது செலுத்தியத்திற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...முஸ்தஃபா முஸ்தஃபா முதல் தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் இருந்து 5 பெஸ்ட் பாடல்கள்..ஃப்ரெண்ட்ஷிப் டே ஸ்பெஷல்

குஷ்பூ இறுதியாக ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த  படத்தில் தோன்றியிருந்தார். மேலும் அவர் சில வரவிருக்கும் திட்டங்களிலும் நடிக்க இருக்கிறார். அதேசமயம் அஜய் தேவ்கன் நடித்த திரிஷ்யம் 2 படத்தின் பிந்தைய வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.

click me!