நீங்க இல்லாம நான் இல்ல... நடிகையாக ஒரு தசாப்தத்தை நிறைவு செய்த கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட எமோஷனல் வீடியோ

By Ganesh A  |  First Published Nov 15, 2023, 11:26 AM IST

சினிமாவில் ஹீரோயினாக 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ள எமோஷனல் பதிவு வைரலாகி வருகிறது.


தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் - நடிகை மேனகா தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷ், கடந்த 2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த கீதாஞ்சலி என்கிற மலையாள படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார் கீர்த்தி. தமிழில் இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் இது என்ன மாயம். ஏ.எல்.விஜய் இயக்கிய இப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கீர்த்தி.

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ரஜினிமுருகன். பொன்ராம் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்து நடித்தார் கீர்த்தி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரெமோ படத்திலும் சிவா உடன் இணைந்து நடித்தார் கீர்த்தி சுரேஷ். இதையடுத்து அவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் விஜய்யின் பைரவா திரைப்படம், இப்படத்தை முடித்த கையோடு சர்காரிலும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் கீர்த்தி.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதையடுத்து டோலிவுட் பக்கம் சென்ற கீர்த்தி சுரேஷுக்கு மகாநதி எனும் தரமான படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் தட்டிச்சென்றார் கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என சவுத் முதல் நார்த் வரை செம்ம பிசியான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி.

இந்த நிலையில், தான் சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் கீர்த்தி. அந்த வீடியோ, தனது பெற்றோர் மற்றும் தனது குருவான இயக்குனர் பிரியதர்ஷனுக்கு நன்றி சொன்ன அவர் இறுதியாக தன்னுடைய ரசிகர்களுக்கு கைகூப்பி நன்றி கூறி உள்ளார். நீங்க இல்லாம நான் இல்ல என எமோஷனலாக பேசியுள்ள அவர், இறுதியாக தன்னுடைய ஹேட்டர்ஸுக்கும் ஒரு மெசேஜ் சொல்லி உள்ளார். அவர்களின் வெறுப்பும் தன்னை இந்த உயரத்துக்கு கொண்டு சொல்ல உதவி இருப்பதாக கூறி இருக்கிறார் கீர்த்தி. இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

With love and Gratitude ❤️🙏🏻 pic.twitter.com/7oXslvuh8I

— Keerthy Suresh (@KeerthyOfficial)

இதையும் படியுங்கள்... இதென்னடா நூதன மோசடியா இருக்கு.... ரூ.17 லட்சத்தை அபேஸ் செய்து பிக்பாஸ் பிரபலத்துக்கு விபூதி அடித்த கும்பல்

click me!