ஜவான் பாடலுக்கு ஜாலியாக டான்ஸ் ஆடிய கீர்த்தி சுரேஷ்... இதுலயும் அட்லீ கேமியோவா! வைரலாகும் ரீல்ஸ் வீடியோ

By Ganesh A  |  First Published Sep 14, 2023, 9:26 AM IST

ஷாருக்கானின் ஜவான் படத்தில் இடம்பெற்ற ஹையோடா பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.


ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள ஜவான் படம் பாலிவுட்டில் பட்டைய கிளப்பி வருகிறது. அட்லீ இயக்கியுள்ள இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது. ஜவான் படத்தின் மூலம் இசையமைப்பாளர் அனிருத்தும் பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்திற்காக அவர் இசையமைத்த பாடல்கள் வேறலெவல் ஹிட் அடித்துள்ளன.

குறிப்பாக ஷாருக்கான் உடன் நயன்தாரா ஆடிய ஹையோடா என்கிற ரொமாண்டிக் பாடல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை ஆக்கிரமித்து உள்ளன. அதில் நயன்தாரா ஆடும் ஹூக் ஸ்டெப் டிரெண்டாகி வரும் நிலையில், அந்த பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ரீல்ஸ் வீடியோவில் இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியாவும் கீர்த்தி உடன் சேர்ந்து நடனமாடி இருக்கிறார்.

Latest Videos

இதையும் படியுங்கள்... நார்த் முதல் சவுத் வரை... பாக்ஸ் ஆபிஸில் அடிச்சு நொறுக்கும் ஜவான் - அதுக்குள்ள ஓடிடியில் ரிலீஸா? லீக்கான தகவல்

இதில் ஹைலைட்டே அட்லீயின் கேமியோ தான். கீர்த்தியும், பிரியாவும் நடனமாடிக்கொண்டு இருக்கும்போது இயக்குனர் அட்லீ நாய்க்குட்டியுடன் அங்கும் இங்கும் வாக்கிங் சென்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே ஜவான் படத்தில் ஷாருக்கான் உடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்த அட்லீ, தற்போது ரீல்ஸ் வீடியோவில் கேமியோ செய்துள்ளதால், அடுத்து எப்போ ஹீரோவா நடிக்க போகிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஜவான் படத்தின் வெற்றியால் திக்குமுக்காடிப் போய் உள்ள அட்லீ, அடுத்த நான்கு மாதத்திற்கு எந்த படத்தையும் இயக்கப்போவதில்லை என முடிவெடுத்து உள்ளார். இருப்பினும் அவர் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். தெறி படத்தின் இந்தி ரீமேக்கான அப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... எஸ்.ஏ.சி-க்கு ஆபரேஷன்... அப்பாவை பார்க்க அமெரிக்காவில் இருந்து அவசர அவசரமாக வந்த தளபதி விஜய் - வைரலாகும் Photo

click me!