சூர்யாவிற்காக கீர்த்தி சுரேஷ் செய்த செயல்..! நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Published : Feb 09, 2021, 06:18 PM ISTUpdated : Feb 09, 2021, 06:24 PM IST
சூர்யாவிற்காக கீர்த்தி சுரேஷ் செய்த செயல்..! நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

சுருக்கம்

நடிகர் சூர்யா, பிப்ரவரி 7 ஆம் தேதி இரவு, திடீர் என கொரோனா தொற்று ஏற்பட்டதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவருக்காக கீர்த்தி சுரேஷ் பிராத்தனை செய்து கொள்வதாக தெரிவித்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.  

நடிகர் சூர்யா, பிப்ரவரி 7 ஆம் தேதி இரவு, திடீர் என கொரோனா தொற்று ஏற்பட்டதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவருக்காக கீர்த்தி சுரேஷ் பிராத்தனை செய்து கொள்வதாக தெரிவித்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,‘கொரோனா’  பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும்  உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என பதிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து சூர்யாவின் ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள்.. விரைவில் அவர் முழுமையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரை வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். சிலர் சூர்யாவிற்கு உடல் நிலையில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள் என அட்வைஸ் செய்ததையும் பார்க்க முடிந்தது.

இவர்களை தொடர்ந்து தற்போது, சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ், சூர்யா விரைவில் குணமாகி வர பிரார்த்தனை செய்கிறேன் என்றும் நன்றாக ஓய்வு எடுங்கள்’ என்றும் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு சூர்யாவின் ரசிகர்கள் நெகிழ்ச்சியில் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?
சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!