விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்..!

By manimegalai aFirst Published Feb 9, 2021, 4:40 PM IST
Highlights

மக்கள் செல்வன், விஜய் சேதுபதியை, மெகா ஸ்டார் சிரஞ்சீவி படவிழாவில் தாறுமாறாக புகழ்ந்து தள்ளியுள்ளது விஜய் சேதுபதி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
 

மக்கள் செல்வன், விஜய் சேதுபதியை, மெகா ஸ்டார் சிரஞ்சீவி படவிழாவில் தாறுமாறாக புகழ்ந்து தள்ளியுள்ளது விஜய் சேதுபதி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்கும் நடிகர்கள் மத்தியில், ஹீரோ என்கிற அடையாளத்தை ரசிகர்கள் மனதில் பதித்து விட்டு, வில்லன், குணசித்திர வேடம், என கலந்து கட்டி நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தற்போது கோலிவுட், டோலிவுட், தாண்டி பாலிவுட்டிலும் பிஸியாக நடிக்க துவங்கியுள்ள விஜய் சேதுபதி, பாலிவுட் வெப்சீரிஸ் ஒன்றில் வில்லனாக நடிக்க ஹீரோவை விட அதிகமாக சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் இவரை தாறுமாறாக புகழ்ந்து தள்ளியுள்ளார் பிரபல மெகா ஸ்டார் சிரஞ்சீவி.  இருவரும் ஏற்கனவே 'சைரா நரசிம்ம ரெட்டி' திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில் தற்போது இந்த வாரம் வெளியாக உள்ள 'உப்பனா' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி, ஹைதராபாத்தில் நடந்தது. அதில் விஜய் சேதுபதி, சிரஞ்சீவி, மற்றும் படக்குழுவை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிரஞ்சீவி, விஜய் சேதுபதி சிறந்த மனிதர் என்றும், கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி நடிப்பதில் வல்லவர் என புகழ்ந்துள்ளார்.

அனைத்து மொழிகளிலும் தன்னுடைய அர்ப்பணிப்பு உணர்வோடு நடிப்பை வெளிப்படுத்தி, விஜய் சேதுபதி வாங்கும் பாராட்டுக்கள் ரசிகர்களை உட்சக படுத்தியுள்ளது மட்டும் இன்றி அவரை மற்றொரு தளத்திற்கு கொண்டு செல்கிறது. தெலுங்கில் இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த படங்களில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க இயக்குனர்கள் முயற்சி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!