
ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக பூஜை போட்ட அன்று சொன்னதோடு சரி, அதன் பிறகு எந்த அப்டேட்டும் சொல்லமாட்டேன் என விடப்பிடியாக இருக்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.போஸ்டர், பேனர், ட்ரெண்டிங் ஹேஷ்டேக் மூலமாக எல்லாம் அப்டேட் கேட்டு அலுத்து போன தல ரசிகர்கள் கடைசியாக, மூக்குத்தி அம்மனில் ஆரம்பித்து திருச்செந்தூர் முருகன் வரை அப்டேட் கேட்டு வருகின்றனர்.
ஐதராபாத், சென்னை, புனே என மாறி மாறி ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்கு சரியான அப்டேட் மட்டும் கிடைக்கவில்லை. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதல் தல அஜித் அவ்வப்போது ரசிகர்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் மட்டுமே, அவை சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன. சமீபத்தில் ஐதராபாத்தில் ரசிகர்களை சந்தித்த தல அஜித்திடம், அப்டேட் எப்போது என ரசிகர் கேட்ட கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு தல அஜித்தே விரைவில் என பதிலளித்ததாக சோசியல் மீடியாவில் தீயாய் தகவல்கள் பரவியது.
சமீபத்திய தகவலின் படி வலிமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படம் பிடிப்பதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் ஸ்பெயின் கிளம்ப தயாராகி வருகிறதாம். பைக்கில் அனல் பறக்கும் சண்டை காட்சிகளை அங்கு படமாக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது மாஸ்டர் படத்தில் டாக்டர் மதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சங்கீதா, “வலிமை” படத்தில் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் வலிமை படத்தில் தான் நடித்திருப்பதாக கூறும் சங்கீதா, அஜித்துடன் நடிக்கும் காட்சிகள் எனக்கு கிடைக்கவில்லை என்றும், இயக்குநர் வினோத்துடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.