விஜய் சேதுபதி படத்தில் நடிக்க முடியாது - கீர்த்தி சுரேஷ் அதிரடி......!!!

Asianet News Tamil  
Published : Oct 17, 2016, 01:31 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
விஜய் சேதுபதி படத்தில் நடிக்க முடியாது - கீர்த்தி சுரேஷ் அதிரடி......!!!

சுருக்கம்

ரெமோ படத்தின் மாபெரும் வெற்றியை  தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பைரவா படத்தில் இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வத்தின் இயக்கத்தில் பெயரிட படத்த  புது படத்தில் விஜய்சேதுபதியுடன் ஜோடியாக நடிக்க ஓகே சொன்ன கீர்த்தி சுரேஷ் தற்போது இதில் நடிக்கமுடியாது என கூறியுள்ளார்.

இதற்கு காரணம் என்னவென்றால் ரெமோ சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் கீர்த்தி சுரேஷ் கேட்ட பெரிய தொகையை கொடுக்க முடியாது என்பதால் அவருக்கு பதிலாக மஞ்சிமா மோகனை இயக்குனர் கமிட் செய்துள்ளார்.

வளர்ந்துவரும் நடிகர் விஜய் சேதுபதியுடன் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என எதிர் பார்த்தவர்களுக்கு இது ஒரு ஏமாற்றம்.

மேலும் கீர்த்தி சுரேஷ் பைரவா படத்திற்கு பிறகு இன்னும் சம்பளத்தை உயர்த்திவிடுவார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போலீஸ் ஸ்டேஷனில் கம்பி என்னும் அர்ஜுன் ஆத்திரத்தில் நளனிடம் சவால் விடும் செல்வநாயகி
ஊரை விட்டு கிளம்ப முடிவு செய்த விஜி ; அதிர்ச்சியில் மயங்கி விழுந்த நிலா: செல்லமே செல்லமே பரபரப்பு காட்சி